Bharathi Kannamma Serial : பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மா தம்பதியர் விஷயம் ஒரு புறம் இருக்க, இன்னொரு புறத்தில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி, பாரதியின் தம்பி அகில் விவகாரம் ரொம்ப ஜாலியா இருக்கிறது. அஞ்சலி ஒரு வயிற்றெரிச்சல் கேஸ்... அக்கா கண்ணம்மாவுக்கு எந்த நல்லதும் நடந்துவிடக் கூடாது என்பதில் பாட்டி, அம்மாவுடன் கைக்கோர்த்து நிற்கிறாள். இப்போது கண்ணம்மா கர்ப்பமாகி இருக்கிறாள்.
புயலாய் மாறிய தென்றல்: வேற யாரு? நம்ம அழகம்மை தான்…
மாமியார் சவுந்தர்யா அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். இந்த சந்தோஷத்தில் அவங்களுக்கு அழகு மருமகள் அஞ்சலி கூட ரெண்டாம் பட்சமா தெரியறா. இதை எல்லாம் அஞ்சலியால் தாங்கிக்கவே முடியலை. கண்ணம்மா கர்ப்பம்னு அத்தை அன்னதானம் போடறாங்க. குனிஞ்சு நிமிந்து வேலை செய்யக் கூடாதுன்னு கண்ணம்மாவை செல்லமா கண்டிக்கறாங்க. இப்படியே போனால் நம்ம நிலைமை என்று யோசிச்சுகிட்டு இருக்கா.
’பாரதி கண்ணம்மா’ அறிவு : உண்மையில் யார் தெரியுமா?
பக்தர் ஒருவர் சிதறு தேங்காய் உடைப்பது கண்ணில் பட்டு விடுகிறது. இந்த தேங்காயை எப்படியாச்சும் எடுத்து திங்கணுமேன்னு யோசிச்சு, வேணாம்மான்னு வேலைக்காரி சொல்ல சொல்ல ஓடிப்போயி கீழே கிடந்த சிதறு தேங்காயை பொறுக்கி ரொம்ப சந்தோஷமா பல்லால் கரண்டித் திங்கறா. அப்போது பார்த்து அங்கு வருகிறான் அகிலன். உடனே தேங்காயை மறைச்சு வச்சுக்கறா.
கோலிவுட் கொரோனா: வைரஸ் தாக்குதல்களை பேசிய ஐந்து தமிழ் படங்கள்!
அஞ்சலி, இன்னிக்கு ஒரு வீடியோ வைரலாகப்போகுது அந்த வீடியோவை பார்க்கறியான்னு வர்றான். இவன் எங்கேடா இங்கே வந்தான்னு பார்க்கறேன் அகில் என்று அஞ்சலி சொல்ல, வீடியோவை காமிக்கறான். அந்த வீடியோவில் அஞ்சலி ஓடிப்போய் தேங்காய் பொறுக்கின காட்சி இருக்குது. அகில் என்ன அகில் இப்படி பண்றேன்னு கேட்க, அஞ்சலி நீ தேங்காய் பொறுக்கித் திங்கறது தப்புன்னு நான் சொல்லலை. அங்கே அன்னதானம் போட்டாங்க அதை சாப்பிடலை. இங்கே இதை வந்து மட்டும் சாப்பிடற? மிஸ் சென்னை தேங்காய் பொறுக்கி சாப்பிடுகிறார்னு வீடியோவை விட்டா வைரலா பரவிடும் அஞ்சலின்னு சொல்றான். அகில் ப்ளீஸ் அப்படி செய்யாதேன்னு அஞ்சலி கெஞ்ச, சரி சரி.. இது என்கிட்டேயே இருக்கட்டும். எப்போதாவது தேவைப்படும்னு சொல்லி அகில் போயிட்டான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"