மாமனார் கடைசி ஆசை... பாரதி வீட்டுக்கு அவசரமாக வந்த கண்ணம்மா!

Serial Update : கணவரை பிரிந்து தனியாக வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

Serial Update : கணவரை பிரிந்து தனியாக வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
மாமனார் கடைசி ஆசை... பாரதி வீட்டுக்கு அவசரமாக வந்த கண்ணம்மா!

Bharathi kannamma Serial Promo Update : சின்னத்திரையில் நாள்தோறும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.  கணவரை பிரிந்து தனியாக வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்த சீரியலில் கடந்த சில மாதங்களாக பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. லக்ஷமியின் அம்மா, பாரதி வெண்பா திருமணம், கண்ணம்மா இரட்டை குழந்தை உண்மை என ரசிகர்களின் எதிர்ப்பை எகிற வைத்து வரும் இந்த சீரியலில், பாரதி கண்ணம்மா இருவரும் எப்போது தான், ஒன்றாக மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த சீரியலின் ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் பாரதி தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்போது தனது மருமகளை பார்க்கவேண்டும் என்று அவர் கேட்கிறார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்து சொல்ல உடனாடியாக மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது பாரதியின் அப்பா தனது கடைசி ஆசை என்று கூறி நீங்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லி சத்தியம் கேட்கிறார்.  அத்துடன் இந்த பரமோ முடிகிறது. இதில் பாரதி சத்தியம் பண்ணுவரா அல்லது பாரதியின் அப்பா இருவரையும் சேர்த்துவைக்க இப்படி செய்கிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் சீரியலுக்கு உண்டான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: