இரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்?

ஆனந்த கண்ணீருடன் குழந்தைகளைப் பார்த்து, நெகிழ்ந்து போகிறார் செளந்தர்யா.

Tamil Serial News, Bharathi Kannamma Serial
Tamil Serial News, Bharathi Kannamma Serial

Tamil Serial News: வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்திருக்க, தற்போது இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறாள் கண்ணம்மா. இது தான் விஜய் டிவி-யில் ஓளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் நிலவரம்.

எஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா? உங்களுக்கு தெரியுமா?

வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். ஆனாலும் அவருக்கு மறைமுகமாக மாமியார் சௌந்தர்யா உதவி செய்து வருகிறார். ஒவ்வொரு முறையும் உதவி செய்வதை அறிந்து விலகி விலகி செல்கிறார் கண்ணம்மா.

இதற்கிடையே பிரசவ வலி ஏற்பட மயங்கி விழுகிறார். மருமகளை தேடி அலைந்த சௌந்தர்யா, ஒருவழியாக கண்ணம்மாவை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே எந்த டாக்டரும் இல்லாததால், வேறு வழியில்லாமல் வெண்பாவை அழைக்கிறார். அவளை பழி வாங்க நினைக்கும் வெண்பாவுக்கோ, ஏக கொண்டாட்டம்.

சிசிடிவி கேமராவை ஆஃப் செய்துவிட்டு, விஷ மருந்துடன் கண்ணம்மாவை கொலை செய்யச் செல்கிறாள். அப்போது துர்கா வந்து கண்ணம்மாவை காப்பாற்றி வெண்பாவை கடத்திச் செல்கிறான். பிரசவத்தை பார்க்க டாக்டர் இல்லாததால், அங்கே இருந்த கண்ணம்மாவின் கணவன் பாரதி பிரசவத்தை பார்க்கிறார். கண்ணம்மாவிற்கு அழகான பெண் குழந்தை பிறக்க, பாரதி கண்களில் நீர் மல்க குழந்தையை பார்க்கிறான்.

பின்னர் குழந்தையை நர்ஸ் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்படுகிறான் பாரதி. அவன் சென்றதும் கண்ணம்மாவிற்கு மீண்டும் வலி ஏற்படுகிறது. அப்போது மற்றுமொரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள் கண்ணம்மா. ஆனந்த கண்ணீருடன் குழந்தைகளைப் பார்த்து, நெகிழ்ந்து போகிறார் செளந்தர்யா. இரட்டை குழந்தைகளை வளர்க்க கண்ணம்மா சிரமப்படுவாள் என்றும், எப்படியாவது அவளை பாரதியுடன் சேர்த்து வைக்க இதை விட்டால் வேறு வழியில்லை எனவும், கறுப்பான குழந்தையை தூக்கிச் செல்கிறார் செளந்தர்யா.

’சீரியலுக்காக தளபதி படத்த மிஸ் பண்ணிட்டேனே’ காவ்யா அறிவுமணி

இரட்டைக் குழந்தைகள் பிறந்த விஷயம் பாரதிக்கும், வெண்பாவுக்கும் தெரியக் கூடாது எனவும், கண்ணம்மாவையும், இன்னொரு குழந்தையையும் நன்றாக பார்த்துக் கொள் எனவும், நர்ஸிடம் சொல்லிச் செல்கிறார். இந்த விஷயம் பாரதியின் தம்பி அகிலுக்கு மட்டுமே இப்போது தெரியும். பிரிந்தவர்கள் இணைவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma twins soundarya tamil serial news

Next Story
’ஷிவானி ஓகே ஆகிருச்சா?’ வெட்கத்தில் பாலாBigg Boss 4 Tamil Vijay tv Bala Sanam Archana Rio Review Day 24
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com