scorecardresearch

‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்!’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்

bharathi kannamma venba emotional speech vijay awards: 6ஆவது விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. இதில், சிறந்த வில்லிக்கான விருது ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக வில்லத்தனம் செய்து வரும் ஃபரினாவுக்கு வழங்கப்பட்டது.

‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்!’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்

விஜய் தொலைக்காட்சி, அதில் ஒளிப்பரபாகும் சீரியல்களின் சின்னத்திரை நடிகர்களை கௌரவிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி மூலம் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 6ஆவது விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.

இதில், சிறந்த வில்லிக்கான விருது ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக வில்லத்தனம் செய்து வரும் ஃபரினாவுக்கு வழங்கப்பட்டது. பாரதிக்கண்ணம்மாவில் அருண் மற்றும் ரோஷினி கணவன் மனைவியாக நடிக்கின்றனர். அதில் பாரதியை ஒருதலையாக விரும்பும் கதாபாத்திரத்தில் ஃபரினா நடித்து வருகிறார்.


விருது வாங்கிய பின் அவரிடம், கையில் ஒரு பொம்மை துப்பாக்கியை கொடுத்து வெண்பா கண்ணம்மாவை சுடுவது போல் நடித்துக் காட்ட வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது ஃபரினா வெண்பா போல வில்லத்தனத்துடன் பேசி நடித்தார், ஆனால் அவர் கண்ணம்மாவை சுடுவதற்குப் பதில் பாரதியை சுட்டுவிட்டார்.

அதன் பின் அவரது தனிப்பட்ட வாழக்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி பேசினார். 7 வருடம் போராட்டம் என்னுடையது என்றும், எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது பாரதி கண்ணம்மாவின் இயக்குனர் பிரவீன் சார் தான், என்று இயக்குனருக்கு நன்றி கூறினார். மேலும், ஒரு பொண்ணு கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் நான் கேட்டிருக்கிறேன். பச்சை பச்சையாக கூட திட்டுவாங்க என்று வில்லியாக நடிப்பதை பற்றி வருத்தத்துடன் பேசினார்.

சொல்லப்போனால் சீரியலில் ஹீரோயினை விட வில்லியாக நடிப்பது தான் கஷ்டம். ஏனென்றால் ஒரு கடை திறப்பு விழாவுக்கு கூட வில்லிகளை கூப்பிடுவதில்லை. ஹீரோயினை தான் கூப்பிடுகிறார்கள், என வருத்தப்பட்டு ஃபரினா பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bharathi kannamma venba emotional speech vijay awards