By: WebDesk
February 20, 2021, 5:40:56 PM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் ரூபா ஸ்ரீ, ( சௌந்தர்யாவும்- பாரதி அம்மா) , வேணு கோபாலகிருஷ்ணன் எடுத்துக் கொண்ட டப்ஸ்மாஷ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், வாய்ப்பில்லை ராஜா என்று கூறி கொண்டு வடிவேலு பாட்டுக்கு நடனம் போடும் சிறு குழந்தையை மக்கள அதிகமாக ரசித்து வருகின்றனர்.
ரூபா ஸ்ரீ , பாரதி கண்ணம்மா தொடரில் சௌந்தர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அகிலனுக்கும் பாரதிக்கும் தாய், தனக்கு ஒரு அழகனா மருமகள் தான் வேண்டும் என்று நினைத்தவர். தற்போது, மனம் திருந்தி பாரதி மருமகளுக்கு முழு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
அதேபோன்று, ரிஷி, இந்த தொடரில் வேணு கோபாலகிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர், அகிலன், பாரதி, சுருதியின் தந்தையாவார்.
இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
இந்த தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Bharathi kannamma vijay tv serial actress dubsmash viral videos