Bharathi Kannamma Serial : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கணிசமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
டாக்டரான பாரதியின் மனைவி கண்ணம்மா. ஆனால் அவனது அம்மா செளந்தர்யாவுக்கு கறுப்பு என்றாலே பிடிக்காது. கண்ணம்மா கறுப்பாக இருப்பதால் அவளை வெறுக்கிறார். கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
சாலையோர வாசிகளுக்கு தங்குமிடம் கோரி வழக்கு; சமூக நலத்துறை செயலர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
பாரதியை கல்லூரியிலிருந்தே ஒருதலையாகக் காதலித்தவள் வெண்பா. கண்ணம்மாவிடம் இருந்து பாரதியைப் பிரிக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை தீட்டுகிறாள். அப்படி அவள் ஏற்படுத்திய விபத்தில் பாரதிக்கு அடிப்பட்டு விடுகிறது. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெண்பா, இனி உனக்குக் குழந்தைப் பிறக்காது என்கிறாள். இதை நம்பிய பாரதி, வேறெந்த மருத்துவரிடமும் பரிசோதிக்காமல் விட்டு விடுகிறான்.
இதற்கிடையே கண்ணம்மாவுக்கு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு 5% தான் என அவளை பரிசோதித்த வெண்பா, அடுத்த பொய்யை அவிழ்த்து விடுகிறாள். இதை கண்ணம்மாவும் நம்பி விடுகிறாள். இந்நிலையில் இந்த சீரியலில் வி.ஜே.மணிமேகலை சிறப்புக் கதாபாத்திரத்தில் வருகிறார். அதாவது, கண்ணம்மாவுக்கு குழந்தைப் பிறக்காது என்பதால், பாரதியின் அம்மா செளந்தர்யா அவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அந்தப் பெண் தான் மணிமேகலை.
குழந்தை பிறக்குமா எனத் தெரிந்துக் கொள்ள, மணிமேகலைக்கு ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும் என அழைக்கிறாள் வெண்பா. இதைக் கேட்ட மணிமேகலை அவள் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விட, அதிர்ச்சியாகிறாள் வெண்பா. பின்னர் செளந்தர்யா மேடம் என அழைத்தவாறே பாரதி வீட்டுக்கு சென்று, ’இந்த பொண்ணுக்கு குழந்தை இல்லன்னு என்ன ரெண்டாவதா கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க. உங்க பையனுக்கு எல்லாம் கரெக்டா இருக்கா?’ என்று கேட்க, நடுங்கிப் போகிறான் பாரதி.
ரூ.4,600 கோடிக்கு ஹைட்ரஜனில் இயங்கும் சூப்பர் கப்பலை வாங்கிய பில்கேட்ஸ்
ஆகா.. முக்கியமான ட்விஸ்ட் இன்னைக்கு உடைஞ்சிடுமோ என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil