Bharathi Kannamma Vinusha Devi Biography Tamil News
Bharathi Kannamma Vinusha Devi Biography Tamil News : தற்போது தமிழ் சின்னதிரையில் பரபரப்பாகப் பேசப்படும் டாபிக், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலின் கதாநாயகி மாற்றம்தான். டஸ்கி டோன் மாடலான ரோஷினி ஹரிப்ரியன், கண்ணம்மாவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். டிஆர்பி ரேட்டிங்கில் பெரும்பாலும் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலின் வெற்றிக்கு ரோஷினிக்கு அதிக பங்கு உண்டு. ஆனால், தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ள இவருக்கு பதிலாக வினுஷா எனும் புதிய நடிகையைத் தேர்வு செய்திருக்கின்றனர். பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ரோஷினி போல இருந்தாலும், மக்களை ஈர்க்க நிறைய உழைக்கவேண்டும்! யார் இந்த வினுஷா?
Advertisment
டஸ்கி டோன் வைத்துதான் இந்த சீரியலின் கதைக்களம் வெற்றி என்பதால், அதே நிறத்தழகியை தேடிக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா குழு, வினுஷாவை தேர்வு செய்துள்ளனர். டஸ்கி மாடலான வினுஷா, ரோஷினி போன்றே தோற்றம் தருகிறார். ஏப்ரல் 28, 1994-ம் ஆண்டு அரக்கோணத்தில் பிறந்தார் வினுஷா. வள்ளியம்மாள் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவர், 'சுந்தரி' சீரியலின் நாயகி கேபிரியல்லவோடு இணைந்து பல மைம் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.தனக்கு கேப்ரியல்லா சகோதரி போன்றவர் எனக் குறிப்பிட்டு, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் காணொளியோடு பதிவு செய்துள்ளார் வினுஷா.
மாடலாக இருந்தாலும், இவர் ஏற்கெனவே டிக் டாக்கில் மிகவும் பிரபலம். அதிலும், திமிரு படத்தில் வரும் ஷ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்தை அப்படியே இமிடேட் செய்து வைரலானார். இதனைத் தொடர்ந்து ஏராளமான போட்டோஷூட் செய்து பிஸியான மாடலாக மாறினார். வினுஷாவிற்கு விவசாயம் என்றால் மிகவும் பிடிக்குமாம்.
Advertisment
Advertisements
வினுஷாவிற்கு திரைத்துறை என்ட்ரி இந்த பாரதி கண்ணம்மா சீரியல் அல்ல. ஏற்கெனவே, கேபிரியல்லா, டிக் டாக் ஃபேம் அக்ஷய் ஆகியோருடன் இணைந்து விரைவில் வெளியாகவிருக்கும் N4 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க, வெள்ளித்திரையைவிட சின்னத்திரை எளிய வழி. அந்த வரிசையில், ரோஷினி பிடித்திருக்கும் இடத்தை வினுஷாவால் தொட முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil