New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Bk.jpg)
Bharathi Kannamma Viral Promo made people to debate Tamil News
Bharathi Kannamma Viral Promo made people to debate Tamil News ஒருமுறை கூட ஹேமாவின் அம்மாவின் பெயரை கண்ணம்மா கேட்டிருக்க வாய்ப்பில்லையா?
Bharathi Kannamma Viral Promo made people to debate Tamil News
Bharathi Kannamma Viral Promo made people to debate Tamil News : நீண்ட நாட்களாக பல லாஜிக் ஓட்டைகளையும் மீறி டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்துக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். ஆனால், சமீப காலமாக மிகவும் அதிகப்படியான லாஜிக் மீறல்கள் உள்ளதால், பொங்கி எழுந்துவிட்டனர் மக்கள். பரபரப்பான ப்ரோமோக்களை வெளியிட்டு, மக்களை எப்படியாவது நிகழ்ச்சியைப் பார்த்து வைத்துவிட வேண்டும் என்கிற குறிக்கோளோடு இருக்கும் இந்த சீரியல் எடிட்டர் இதில் வெற்றிபெற்றாலும், மக்களின் பார்வையிலிருந்து இவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.
அஞ்சலியின் வளைகாப்பு விழாவில் போட்டு வைத்துவிடக் கூறி வெண்பாவை கூப்பிட்டபோது, திருமணம் ஆகாதவர்கள் பொட்டு வைக்கக்கூடாது என்கிற தத்துவதோடு ஒரு ப்ரோமோ முடிய, அடுத்த ப்ரோமோவில் பாரதியும் கண்ணம்மாவும் இணைந்து ஒன்றாகப் பொட்டு வைக்கின்றனர்.
இதைப் பார்த்துக் கடுப்பான வெண்பா இனி என்ன செய்யப் போகிறார் என்கிற பதற்றத்தைவிட, கண்ணம்மா தன் மாமியாரிடம் இன்னும் வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என்றால், ஹேமா யார்? அவள் எப்படி என்னைப்போலவே இருக்கிறாள்? என்று நீண்ட நாள்களுக்குப் பிறகு கண்ணம்மாவிற்கு எழுந்த கேள்விக்கு, நெட்டிசன்கள் வெவ்வேறு விதமாக ரியாக்ட் செய்திருக்கின்றனர். அவற்றில் சில இங்கே..
"ப்ரோமோ எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனால், லாஜிக் இல்லையப்பா. ஹேமா முன்பு கண்ணம்மாவைக் கூப்பிட்டு சம்பிரதாயங்களைச் செய்யச் சொல்கிறார்கள். ஹேமாவிற்கு தன்னுடைய தாயின் பெயர் கண்ணம்மா என்பது தெரியுமே. அதை ஏன் இயக்குநர் யோசிக்கவில்லை?"
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஹேமாவிடம் தன் தாய் இறந்தகாக சொல்லியிருப்பதால், அந்த சந்தேகம் ஹேமாவிற்கு வராமல் இருந்திருக்கலாம் என்று ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.
அது மட்டுமா? ஹேமா மற்றும் லட்சுமி முன்பு கண்ணம்மா தன்னுடைய மாமியாரை 'அத்தை' என்று பலமுறை அழைத்திருக்கிறார். அப்போது சந்தேகம் வரவில்லையா யாருக்கும்? என்று அடுத்த கமென்ட் வர, ஒருமுறை கூட ஹேமாவின் அம்மாவின் பெயரை கண்ணம்மா கேட்டிருக்க வாய்ப்பில்லையா என்று மற்றொரு கமென்ட் வர, நெட்டிசன்கள் விவாதம் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.