பிரக்னன்சிக்காக வேலையை விடாதீங்க… அனுபவம் பகிரும் ஃபரினா!

Bharathikannamma Farina shares pregnancy experience: குழந்தைப் பிறப்பிற்காக வேலையை விட வேண்டாம்; பாரதி கண்ணம்மா வெண்பா அட்வைஸ்

குழந்தை பிறப்பிற்காக வேலையை விட்டுவிட வேண்டாம் என பாரதிகண்ணம்மா வில்லி ஃபரீனா தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதிகண்ணம்மா. சீரியலில் முக்கிய கதாப்பாத்திரங்கள் மாற்றப்பட்ட நிலையிலும், சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து பிரபலமானவர் ஃபரீனா. ஃபரீனா நிஜ வாழ்க்கையில் நவம்பர் 16 அன்று அழகான ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். ஆனால் ஃபரீனா கர்ப்பமாக இருந்தப்போதும் சீரியலில் இருந்து நடிப்பதை விடாமல் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் பிரசவிக்கும் நாட்களில் மட்டும் அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் சீரியலில் கதை அமைக்கப்பட்டது. இதனால் வில்லி வெண்பா கதாப்பாத்திரம் மாற்றப்படாமல், ஃபரீனாவே தொடர்ந்து வருகிறார்.

இந்தநிலையில் ஃபரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரசவ அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில்,

நான் காட்சிப்படுத்திய மற்றும் வெளிப்படுத்தியபோது, ​​இது இடைவெளி இல்லாத ஒரு அற்புதமான, வலியற்ற உழைப்பு அனுபவம்.

எவ்வளவு எதிர்மறை மற்றும் மோசமான கருத்துக்கள் இருந்தபோதிலும் நான் அழகான குழந்தையை பிரசவித்துள்ளேன்.

இது ஒரு 6 மணிநேர தீவிர உழைப்பு மற்றும் 4 தள்ளுதல்.

கர்ப்ப காலம் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது, பிரசவத்தின் கடைசி வாரம் வரை வேலை செய்தல், உடற்பயிற்சிகள், யோகா போன்றவை நன்றாக உதவியது.

என்னால் முடியும் என்றால், நீங்களும் செய்யலாம்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் யார் என்பதை விட்டு விலக வேண்டும் என்பதல்ல! கர்ப்பம் என்பது வாழ்க்கையின் ஒரு கட்டம், நீங்களாக இருங்கள், அதை எதிர்கொள்ளுங்கள்.

சுந்தரம் மருத்துவ அறக்கட்டளையின் டாக்டர் உமா அவர்களுக்கு நன்றி

கர்ப்பத்தின் கடைசி தருணம் வரை என்னை வெண்பாவாக வைத்திருந்ததற்கும், எல்லாவிதமான கருத்துக்களையும் உடைத்ததற்கும் இயக்குனர் பிரவீன் பென்னட் (@praveen.bennett) க்கு நன்றி.

பயிற்சியாளர் திலக்கின் (@coach.tilak) முழு நேர உந்துதல் (மோட்டிவேட்) மற்றும் பயிற்சிக்கு நன்றி. ஒரு வாரத்தில் உடற்பயிற்சிகளுக்கு திரும்ப காத்திருக்கிறேன்.

ருபாயத் (@rubaidh) என் வாழ்நாள் அன்பு மற்றும் ஆதரவு அமைப்பு! இப்போதும் என்றென்றும் உனக்கு முத்தங்கள். என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathikannamma farina shares pregnancy experience

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com