Bharathikannamma serial new shooting spot video goes viral: பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பா தூக்கு மாட்டிக் கொள்வது போல் வெளியாகியுள்ள ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவால், சீரியல் முடியப்போகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போதைய தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. சீரியல்களில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தாலும், முக்கிய கதாப்பாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்பரியன் மாற்றப்பட்டது, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த சீரியலுக்கான மவுசு குறையவில்லை. ரோஷினிக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி, கண்ணம்மாவாக நடித்து வருகிறார். ஆனால், சமீப காலமாக இந்த சீரியல் ரசிகர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.
சீரியலைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களின் எபிசோட்களில் கோர்ட் உத்தரவை மதித்து பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் சேர்ந்து இருக்கிறார்கள். அதாவது பாரதி கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கு பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் சின்ன சின்ன சண்டை வருகிறது. இதற்கிடையில் இந்த 6 மாத கால வாய்ப்பைப் பயன்படுத்தி பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க நினைக்கிறார் சௌந்தர்யா. இந்தநிலையில், யார் பக்கம் நியாயம் இருக்கு என தெரிந்துக் கொள்ள நீதி காத்த அம்மன் கோயிலில் பாரதியும் கண்ணம்மாவும் பொங்கல் வைக்கின்றனர். அதில் கண்ணம்மா பக்கமே நீதி உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் அவரது பொங்கல் முதலில் பொங்கியது. ஆனாலும் பாரதிக்கு சந்தேகம் தீரவில்லை.
கண்ணம்மா தவறு செய்யவில்லை என தெய்வமே பாரதிக்கு உணர்த்தி விட்டது போல் கடந்த வார எபிசோடுகள் ஒளிப்பரப்பானது. தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. அதில், பாரதி, கண்ணம்மாவை மன்னித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வது போல் காட்சிகள் இருந்தன. பாரதி மாறிட்டாரா? அப்ப சீரியல் முடியப்போகுதா என ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், அதில் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. அதில், மீண்டும் பழைய விஷயத்திற்கே வரும் பாரதி. கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார். ஆனால் கண்ணம்மா செய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். அதற்கு கண்ணம்மாவும் கையெடுத்து கும்பிடு போடுகிறார். இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள் மீண்டும் முதலில் இருந்தா என சலிப்படைந்துள்ளனர்.
இதனிடையே, இந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா தூக்கு மாட்டிக் கொள்வது போல் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியாகியுள்ளது. வெண்பா தூக்கில் தொங்க முயற்சிப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியல் முடியப்போகுதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil