By: WebDesk
Updated: February 10, 2021, 11:57:09 AM
bharathikannamma vijay tv serial bharathi kannamma
bharathikannamma vijay tv serial bharathi kannamma: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கிறது. வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து, இரட்டைக் குழந்தைகளும் பிரிந்து விட்டார்கள்.
8 வருடத்திற்கு பிறகு இந்த கதைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ன எதிர்பார்த்தவர்களுக்கு.. இதோ அந்த தருனம் கூடிய விரைவில் வர போகிறது. பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வந்து விடும்.
வெண்பாவின் சூழ்ச்சியால் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கண்ணம்மா நடு ரோட்டில் சுருண்டு விழுகிறாள். அதுமட்டுமில்லை, அந்த நேரம் பார்த்து அந்த பக்கம் வருகிறது பாரதி கார். கண்டிப்பாக கண்ணம்மாவை தவிர வேற யார் அங்கு இருந்திருந்தாலும் பாரதி உதவி இருப்பான். ஆனால், கிடப்பது கண்ணம்மா என்று தெரிந்த உடன், காரை திருப்ப முயல்கிறான்.
ஆனால் விதி வலியது இல்லையா? கடைசியில் கண்ணம்மாவை தூக்கி கொண்டு தன் காரில் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ட்ரீட்மெண்ட் பார்க்கிறான். ஆக மொத்தத்தில் கண்ணமாவுக்கு கஷ்டம் என்றவுடன் முதலில் வந்து உதவுவது பாரதி தான். இதில் மாற்றமே இல்லை.
நீதானே.. நீதானே.. என் நெஞ்சைத்தட்டும் சத்தம்..! ❣️