/tamil-ie/media/media_files/uploads/2023/08/Bharathiraja.jpg)
பாக்யராஜ் ஹீரோவாக உருவான கதையை பகிர்ந்த பாரதிராஜா
பாக்யராஜ் குறித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனிடம் அவரது வலையொளி சேனலில் பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது, பாக்யராஜ்-ஐ கதாநாயகனாக நடிக்க வைத்த தாம் மேற்கொண்ட சிரமங்கள் பற்றியும் பேசினார். முதலில் பாக்யராஜ்-ஐ கதாநாயகனாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
தொடர்ந்து, அவர் பேசுகையில், “வாத்தை காதைப் பிடித்துதான் தூக்க வேண்டும்; கோழியை காலைப் பிடித்து தூக்க வேண்டும்.
அப்படிதான் அவனைப் பார்த்தேன். அவனிடம் எந்த ஊருடா எனக் கேட்டேன். கோயம்புத்தூர் பக்கம் சொன்னான். அவன் சிறந்த எழுத்தாளர்.
புதிய வார்ப்புகள் படத்தில் அருமையாக ஒரு டயலாக் எழுதினான். முதலில் பாக்யராஜை ஹீரோவாக பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
உடல் எடையை காட்ட மதியம் சாப்பாட்டு முன் ஒரு பீர், அப்புறம் இரவு ஒரு பீர் என இரண்டு பீர் குடிக்க சொன்னேன்” என்றார்.
தொடர்ந்து, 16 வயதினிலேயே படம் ஓடுமா? ஓடாதா? என்ற அச்சம் எனக்குள் இருந்தது. அப்புறம் படம் பார்த்தேன். இந்தப் படம் ஓடவில்லை என்றால், ஊருக்கு சென்று ஆடு மாடு மேய்ப்பேன் என நினைத்துக் கொண்டார் என்றார்.
மேலும் அந்தப் படத்துக்கு முதல் பாராட்டு பாலா சாரிடம் இருந்து வந்தது என்றார். 16 வயதினிலேயே படத்தில் கமல் கோமணம் கட்டி நடித்ததை பலரும் கிண்டல் செய்தனர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.