பாலியல் தொந்தரவு கொடுத்ததை நீங்கள் பார்த்தீரா என செய்தியாளர்களிடம் இயக்குநர் பாரதிராஜா ஆவேசமடைந்தார். மீ டு என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை பெண்கள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுவதால் பெரும் சர்ச்சை ஏற்படுகிறது.
மி டூ விவகாரம் தொடர்பாக பாரதிராஜா பதிலடி :
இதுபோல் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். இந்த புகாருக்கு வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்று வைரமுத்துவும் பதிலளித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பாரதிராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
#Bharathiraja gets uncomfortable wen questioned about #MeToo. Relax sirae…..! pic.twitter.com/7hqY8IonHL
— bharathnt (@bharath1) 16 October 2018
அப்போது மிகவும் ஆவேசமடைந்த அவர் “பாலியல் தொந்தரவு கொடுத்தத நீ பாத்தியா நீ பாத்தியா. கேள்விபட்ருக்க ; கேள்விபட்டதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. என்னிடம் வேறு எந்த கேள்விகளையும் கேட்கக் கூடாதுனு சொன்னேன் இல்லையா. இதுபோன்ற கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்” என்று பாரதி ராஜா கோபமாக கூறிவிட்டு கிளம்பினார்.