scorecardresearch

பாரதிராஜா குடும்பத்தில் சோகம்: அவசரமாக சொந்த ஊருக்கு பயணம்

இயக்குனர் இமயம் பாரதிராஜா, தனது மாணவர் நடிகர், இயக்குனர் மனோபாலாவின் திடீர் மரணத்தால் மிகுந்த துயரமடைந்திருந்த நிலையில், மேலும் ஒரு துயரச் செய்தியாக அவருடைய சகோதரியின் கணவர் இறந்த செய்தியைக் கேட்டு அவசரமாக தனது சொந்த ஊருக்கு சென்றார்.

Bharathiraja's Sister Bharathi's husband passed away, பாரதிராஜா குடும்பத்தில் சோகம், பாரதிராஜா அவசரமாக சொந்த ஊருக்கு பயணம், Bharathiraja's Sister Bharathi's husband passed away
பாரதிராஜாவின் சகோதரியின் கணவர் மரணம்

இயக்குனர் இமயம் பாரதிராஜா, தனது மாணவர் நடிகர், இயக்குனர் மனோபாலாவின் திடீர் மரணத்தால் மிகுந்த துயரமடைந்திருந்த நிலையில், மேலும் ஒரு துயரச் செய்தியாக அவருடைய சகோதரியின் கணவர் இறந்த செய்தியைக் கேட்டு அவசரமாக தனது சொந்த ஊருக்கு சென்றார்.

தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களில் இருந்து வெளியே அழைத்துச் சென்றவர் இயக்குனர் பாரதிராஜா. அசலான கிராமத்தையும் மக்களையும் திரையில் ஓவியமாக்கியவர் பாரதிராஜா. இவருடைய உதவியாளர்களாக இருந்த இயக்குனர்கள், பாக்யராஜ், மனோபாலா வெற்றி இயக்குனர்களாக வலம் வந்தனர்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராகி ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்களை வைத்து படங்களை இயக்கியவர் இயக்குனர் மனோபாலா. பின்னர், நடிக்கத் தொடங்கிய பின்னர், குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா மிகுந்த துயரத்த வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டார். மனோபாலாவின் துயரத்தில் இருந்தே மிளாத இயக்குனர் பாரதிராஜாவுக்கு மேலும், ஒரு சோக நிகழ்வாக, அவருடைய சகோதரி பாரதியின் கணவர் துரைராஜ் தேனி அல்லி நகரத்தில் காலமானார் என்று செய்தி வந்து தாக்கியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவின் சகோதரி பாரதியின் கணவர் துரைராஜ். இவர் உடல்நலக் குறைவால் மே 4-ம் தேதி தேனி அல்லி நகரத்தில் காலமானார். சகோதரியின் கணவர் காலமான செய்தியைக் கேட்டு பாரதிராஜா அவசரமாக தனது சொந்த ஊர் அல்லிநகரத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bharathirajas sister bharathis husband passed away