எளிமையாக நடைபெற்ற நடிகை பாவனாவின் திருமணம்: காதலரை மணந்தார்

நடிகை பாவனாவின் திருமணம் இன்று (திங்கள் கிழமை) கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்றது. அவர் தன் காதலரும், கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீனை மணந்தார்

பிரபல மலையாள நடிகை பாவனாவின் திருமணம் இன்று (திங்கள் கிழமை) கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்றது. அவர் தன் காதலரும், கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீனை மணந்தார். இத்திருமணம் கேரள முறைப்படி எளிமையாக நடைபெற்றது. இத்திருமணத்தில் இரு வீட்டார் உறவினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாவனா – நவீன், அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக, பாவனா – நவீன் மெஹந்தி நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், பாவனா மஞ்சள் நிறத்தில் அழகிய உடை அணிந்திருந்தார். இதில், அவருடைய நண்பர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். நடிகை ரம்யா நம்பீசன், மிருதுளா முரளி, பாடகி சாயனோரா ஃபிலிப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

திரைத்துறையை சேர்ந்தவர்களுக்காக தம்பதியரின் வரவேற்பு நிகழ்வு திருச்சூரில் நடைபெற உள்ளது.

இதனிடையே, இருவரது திருமணமும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக நின்றுவிட்டதாக வதந்திகள் பரவின.

கடந்தாண்டு பாவனாவின் தந்தை காலமானார். இதனால், இத்தம்பதியரின் திருமணம் சிலமுறை தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

Happy wedding #bhavana

A post shared by ഞങ്ങളെ തിരുവല്ലക്കാര Official® (@nammude__thiruvalla) on

Happy Married Life #Bhavana & #Naveen

A post shared by CineTimee (@cinetimee) on

பாவனாவி மெஹந்தி நிகழ்வு

A post shared by Bhavana Menon (@bhavanamenon) on

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close