big boss 3 eviction: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மேலூங்கியுள்ளது. சமூகவலைத்தளங்களில் கவின் - லாஸ்லியாவுக்கு ஆர்மி அதிகமாக இருந்தாலும், உண்மையான பிக் பாஸ் ரசிகர்கள் கவினை வெளியேற்ற வேண்டும் என்றே துடித்து வருகின்றனர். பெண்களை வைத்து கேம் விளையாடிய குற்றச்சாட்டு கவின் மேல் இருக்கும் மிகப் பெரிய விமர்சனம் என்பது அனைவருக்கும் தெரியும்.
big boss 3 today :
இன்றைய முதல் ப்ரமோவில் கமல்ஹாசன், கவின் - சேரன் இருவரில் யாரை காப்பாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு லியா, சேரன் - கவின் இருவரின் முதுகுபுறத்திலும் கைவைத்து இருவரையும் காப்பாற்றப்பட வேண்டும் என்று புரிய வைக்கிறார். இந்த ப்ரமோவிற்கும், லாஸ்லியா பதிலுக்கு நெட்டிசன்கள் சொல்லும் பதில் உலகமகா நடிப்புடா சாமி என்பது தான்.
big boss promo 2:
எவிக்ஷனில் இருந்து தப்பிக்கிறார் ஷெரீன். பிக் பாக்ஸ் இல்லத்தில் ஆண்களுக்கு நிகராக போட்டியில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஷெரீன் இந்த முறையும் ரசிகர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். யாரை காப்பாற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் மக்களை பார்த்து கத்துகிறார். அதற்கு ஷெரீன் பெயர் தான் முதலில் வந்து நிற்கிறது. சொல்லி வைத்தது போலவே ஷெரீன் காப்பாற்றப்படுகிறார்.
big boss today promo 3:
கடைசி ப்ரமோ ட்விஸ்ட் இதுதான். லாஸ்லியா அல்லது சேரன் இருவரில் ஒருவர் தான் வெளியேற போவது தெரிந்து விட்டது. இதில் சஸ்பென்ஸ் கொடுப்பதாக நினைத்து கமல்ஹாசன் சேரன் மற்றும் லாஸ்லியாவை ஹவுஸ்மேட்டுக்கு பிரியா விடை கொடுத்து வர சொல்கிறார். உடனே லாஸ்லியாவும், சேரனும் அதற்கு தயாராகிறார்கள். கவின் லாஸ்லியாவிடம் சென்று ஏதோ கதைக்க அதற்கு லாஸ்லியா நான் சந்தோஷமாக தான் வெளியே செல்கிறேன் என்கிறார்.
சமூலவலைத்தளங்களில் வெளியான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் படி சேரன் தான் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம், சேரன் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக இருப்பதால் தான் அவரை வெளியேற்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கவினை விஜய் தொலைக்காட்சி தான் வேண்டுமென்றே சேவ் செய்வதாகவும் கூறப்படுகிறது.