big boss 3 title winner: கடந்த 105 நாட்களாக நடைப்பெற்று வந்து பிக் பாஸ் சீசன் 3 நேற்றுடன் நிறைவு பெற்றது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீச3 3 டைட்டில் வின்னர் முகென் ராவ். நிகழ்ச்சி ஒளிப்பரப்பாவதற்கு பல மணி நேரம் முன்பே இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.
Advertisment
big boss 3 finals:
எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று அடிக்கடி கூறி வந்த கமல் கடைசியில் போட்டியின் முடிவை மட்டும் எதிர்பார்த்தை மட்டுமே அறிவித்தார். டைட்டில் வின்னர் முகென் தான் என்பதையும் 1 வாரத்திற்கு முன்பே பலரும் கணித்து விட்டனர். அவர்கள் கணித்தது போல் இறுதியில் நடந்தது.
சாண்டி,முகின், லாஸ்லியா,ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதி கட்டத்திற்கு போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் இந்த வாரம் முழுக்க நடந்த ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் முதல் இடத்தை முகின் பிடித்துள்ளார் என்று கமல் அறிவித்திருந்தார்.
Advertisment
Advertisements
மலேசியாவைச் சேர்ந்த முகென்னுக்கு வெற்றியாளர் விருதுடன் 50 லட்ச ரூபாய் (97,246 வெள்ளி) பணமும் கொடுக்கப்பட்டது. சேண்டியும் லாஸ்லியாவும் முறையே இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். முகெனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், மலேசியா ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.
பல்வேறு சவால்களுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு நேரடியாகச் செல்வதற்கான தங்க டிக்கெட்டை முகென் பெற்றுக்கொண்டபோது அவரது ஆதரவாளர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
மாபெரும் இறுதிச் சுற்றுக்கான மேடையில் முகென்னும் சேண்டியும் தங்கத் தேரில் வந்து இறங்கினர். நிகழ்ச்சி நெறியாளர் கமலஹாசன் அவர்களுடன் சற்று கலகலப்பாக உரையாடிய பிறகு, முகெனை போட்டியின் வெற்றியாளராக அறிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, ஃபைன்ல்ஸில் இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் சிறப்பு பட்டங்களுடன் கூடிய விருதை வழங்கினார். கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது.சிறந்த நண்பர் (best buddy) விருது ஷெரினுக்கு வழங்கப்பட்டது.வனிதாவிற்கு கட்ஸ் அண்ட் கிரிட் (guts and grit) விருது வழங்கப்பட்டது.சேரனுக்கு மிகவும் ஒழுக்கமானவருக்கான விருது வழங்கப்பட்டது.
தர்ஷனுக்கு இதில் ஆல் ரவுண்டர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த விருதுடன் தர்ஷனை அனுப்பி விடுவார்களா? என்ற பயமும் ஏக்கமும் அவரின் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நேரத்தில் தான் மிகப் பெரிய ஷாக்கை தந்தார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ச்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் முன்னிலையிலும் கமல் அறிவித்தார்.
— Tharshan Army 2.0 ???????????? (@Tharshanarmy2o) October 6, 2019
அப்போது அரங்கத்தில் இருந்த தர்ஷனின் ரசிகர்கள் கைத்தட்டல்களால் அரங்கத்தை அதிர வைத்தன. அதுமட்டுமில்லை இந்த அறிவிப்பை கேட்டவுடன் தர்ஷனின் தாயார் ஆனந்த கண்ணீரால் அழுதார். இதைப்பார்த்த தர்ஷனும் கண்கலங்கி கமலுக்கு நன்றி கூறினார்.