Advertisment

ஐஷூ- நிக்சன் கொடுத்த முத்தம்: இப்படி நடந்துகொள்வதா?: பார்வையாளர்கள் ஷாக்: வைரல் வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களான ஐஷூ- நிக்சன் கண்ணாடி வழியாக முத்தம் கொடுக்கும் காட்சிகள் வைராகி வருகிறது.

author-image
WebDesk
New Update
nik

பிக்பாஸ் போட்டியாளர்களான ஐஷூ- நிக்சன் கண்ணாடி வழியாக முத்தம் கொடுக்கும் காட்சிகள் வைராகி வருகிறது.

Advertisment

பிக்பாஸ் பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக போட்டியாளர் பிரதீப் மீது உள்ளது. இந்நிலையில் நிக்சன் சிறப்பாக விளையாடுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நிக்சன் மற்றும் ஐஷூவின் நெருக்கம் பார்வையாளர்களுக்கு பிடிக்காததுபோல் உள்ளது. ஏற்கனவே மணி மற்றும் ரவீனா பழகுவதும் பலரால் விமர்சிக்கப்பட்டது.  பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களே அதை விமர்சித்தனர். ஐஷூ, நிகசன் இருவருமே மணி மற்றும் ரவீனாவை விமர்சித்தனர்.

இந்நிலையில் ஐஷூ- நிக்சன் கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்து கொண்ட காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீடுகளை பிரிக்கும் கண்ணாடிக்கு இந்த பக்கத்தில் நிக்சன் மற்றும் அந்த பக்கத்தில் ஐஷூ இருக்கிறார். இருவரும் மைக் அணியவில்லை. நிக்சன் ஏதோ சொல்கிறார். அதற்கு நீ என் நண்பன் என்று ஐஷூ சொல்கிறார். தொடர்ந்து ஐஷூ முத்தம் கொடுக்கிறார். நிக்சன் நிஜமாகவா என்று கேட்கிறார். தொடர்ந்து நிக்சனும் ஐஷுவிற்கு கண்ணாடி வழியாக முத்தம் கொடுக்கிறார். இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போது, பிக்பாஸ் இருவரையும் மைக் அணிய சொல்கிறார். நிக்சன் நல்ல போட்டியாளராக வருவார் என்று நினைத்தோம், ஆனால் அப்படி நடக்கவில்லை என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment