ஓவியா புதுக் காதல்… போல்டான முத்தம்: மறுபடியும் ஆர்மிக்கு வேலை வந்துருச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா சக போட்டியாளர் ஆரவ்வுடன் நெருக்கம் காட்டினார். இதனால் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானார்

By: January 15, 2021, 3:39:01 PM

தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான நாளை நமதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன்பிறகு களவானி, கலகலப்பு, மெரினா, 90 எம்எல், காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடத்து முன்னணி நடிகையாக வளம் வரும் அவர், தற்போது ராஜ பீமா மற்றும் சம்பவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் முறையாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா சக போட்டியாளர் ஆரவ்வுடன் நெருக்கம் காட்டினார். இதனால் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளான அவர், பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் அவரும் நடிகர் ஆரவ்வும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அவர்களின் நடவடிக்கையும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.

ஆனாலும் தனிப்பட்ட வாழ்வில் தனது இயல்பை வெளிப்படுத்திதன் மூலம் ஓவியா மக்களின் மனதில் வரவேற்பை பெற்றார்.  பிக்பாஸ் முதல் சீசன் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூகவிலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தினர். ஆனால் அதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஓவியா ஆரவ் இருவரும், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதல் இல்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து ஆரவ்க்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் நடிகை ரஹேயுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு, வாழ்த்து தெரிவித்த ஓவியா, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் என வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு ஓவியா பற்றி எந்த தகவலும் வராத நிலையில், தற்போது அவர், ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைபடத்திற்கு “லவ்” என்று தலைப்பிட்டுள்ள ஓவியா தெரியாத நபரின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல் உள்ளது. இதன் மூலம் நடிகை ஓவிய புதிய உறவில் இறங்கியிருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மேலும் இது குறித்து ஓவியா ரசிகர்கள் சமூக வலைதளங்களில், பலவிதமான கேள்விக்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் ஓவியாவின் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Big boss oviya new love photo added social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X