இயக்குனர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி குடி போதையில் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பி.வாசுவின் மகன் சக்தி. இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சக்தி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் சக்தி பிரபலம் ஆனார். அன்று முதல் பிக்பாஸ் சக்தி என்றே இவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
Big boss sakthi : போதையில் பிக்பாஸ் சக்தி!
நேற்றைய தினம் (8.1.19) சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மது அருந்திவிட்டு காரில் சென்றார். போதையில் இருந்த காரணத்தினால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனது காரை எடுத்துள்ளார் சக்தி. அப்போது அவரது காருக்கு முன்னால் இருந்த கார் மீது சக்தியின் கார் மோதியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கார் ஓட்டுனர் வந்த சக்தியிடம் பார்த்து ஓட்டக்கூடாதா? என்று தகராறு செய்துள்ளார். அப்போது தான் யார் தெரியுமா? என்று கேட்டபடி போதையில் சக்தி காரை எடுக்க முயன்றுள்ளார்.
இதனால் அங்கு நின்று கொண்டிருந்த சிலர் மீதும் கார் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைநத் பொதுமக்கள் காரை சுற்றி வளைத்து நிறுத்தினர். மேலும் உள்ளே இருந்த சக்தியை வெளியே வருமாறு கூறினர். இதனை அடுத்து போதையில் இருந்த சக்தி தப்ப ஓட முயன்றதாகவும், அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து அமர வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனை அடுத்து போலீசார் அங்கு வந்து சக்தியை அழைத்துச் சென்றனர். அண்ணா நகர் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில் வைத்து சக்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது .இதனை அடுத்து சக்தியை கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்தனர். நீதிமன்றத்தில் சென்று அபராதம் செலுத்துமாறு சக்திக்கு அறிவுறுத்தப்பட்டது.