பிக்பாஸ் சீசன் 4 : இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா?

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamala Hassan Aari Bala Anita review Day 84
Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்கள் பற்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், ரசிகர்களிடம் குறைவான வாக்கு வாங்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் ஏற்கனவே பாடகர் வேல்முருகன், நடிகை ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வெளியேற்றப்பட்டனர்.

அதன்பிறகு ஒருசில வாரங்கள் எலிமினேஷன் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஜித்தன் ரமேஷ் அதனைத் தொடர்ந்து நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். இதனால் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த பட்டியலில், ஆரி, அனிதா, கேபி, ஷிவானி மற்றும் ஆஜீத் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதில் தற்போது அனிதா சம்பத் இந்த வாரம் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், ஆரி மற்றும் பாலாவுடன் கடுமையாக நடந்துகொண்ட அனிதா சம்பத்க்கு ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அனிதா இந்த வார தொடக்கத்தில் ஆரியிடம், தனது குடும்பத்தையும் தனது கணவர் பிரபா பற்றியும் பேசாதீங்க ஆரி என கடுமையாக நடந்துகொண்டார்.  அவரின் இந்த நடவடிக்கையே  அவருக்காக ஓட்டு குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 83 நாட்களுக்கு மேல் இருந்த அனிதா சம்பத் இந்த வாரம் வெளியேற்றப்படும் நிலையில், இது சரியான முடிவு என்று ஒரு சிலரும், இது அனிதாவுக்கு இழைக்கபப்ட்ட அநீதி என்று இரு வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அனிதா சம்பத் வெளியேறும் பட்சத்தில், ஆரி, ரியோ, ரம்யா,ஷிவானி, ஆஜித்,கேபி, சோமசேகர் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள்.

இதில் ஆரியை தவிர மற்ற அனைவரும் விஜய் டிவியில் அங்கம் வகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Big boss season 4 who knows this weeks elimination

Next Story
வனிதாவின் கிறிஸ்துமஸ் அட்ராசிட்டி.. மேக்கப் பார்த்து ரசிகர்களின் ரியாக்‌ஷன்ஸ்!vanitha vijayakumar age vanitha peter paul
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com