பிக்பாஸ் சீசனில் மணி மற்றும் ரவிணாவிற்கு இடையே புதிய அன்பு ஏற்பாடுள்ளதுபோல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு சம்பவங்கள் நடைபெறுள்ளது. இதில் போட்டியாளர் மணி ரவிணாவிடம் சென்று தனக்கு அவர் நேரம் ஒதுக்கவில்லை என்றும் இதனால் மனம் புண்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து ரவிணா இனி இதுபோல் நடக்காது என்று தெரிவித்தார். தொடர்ந்து இதை வெறும் விளையாட்டு என்று மணி கூறினார். ஆனால் மீண்டும் ரவிணா உண்மையை சொல்ல வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து ரவிணா இனி இதுபோல நடைபெறாது என்று கூறினார். மேலும் அடிக்கடி ரவிணா எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மணி அவருக்கு கூறுகிறார்.
ரவிணாவும் அவரின் கையை உரிமையாக கடித்து விளையாடுகிறார். மணி சாப்பிட்ட தட்டை ரவிணா கழுவ வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதைத்தொடர்ந்து ரவிணாவும் தட்டை கழுவுகிறார்.
இது ஒரு பக்கம் நடக்க மறுபக்கத்தில் போட்டியாளர் பிரதீப் தீவிரமாக யோசித்துகொண்டு வீட்டின் வெளியே நடந்துகொண்டிருக்கிறார். அவரிடம் யுகேந்திரன் என்ன விஷயம் என்று கேட்டபோது, “ ஏற்கனவெ நான் வெளியேற்றப்பட வேண்டும் என்று நாமினேட் செய்யப்பட்டுள்ளேன். இனி எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மற்றவர்களை காயப்படுத்தாமல் நடந்துகொள்ள வேண்டும். அதை எப்படி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் சமையல் வேலைகளை ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் செய்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை யார் பெருக்க வேண்டும் என்று நடைபெற்ற டாஸ்கிலும், பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் வெற்றிபெற்றாதல், அந்த வேலையும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து யார் கழிப்பறையை சுத்தம் செய்வது என்ற போட்டி வைக்கபப்ட்டது. அதிலும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் வெற்றி பெற்றனர்.
ஆனால் சமையலறைக்குள் யாரும் போகக்கூடாது என்று கூறப்பட்டது. ஆனால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் இருவரும் அங்கே சென்றதால், அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். இதைத்தொடர்ந்து, இவர்களுக்கு பதிலாக இரண்டு பேரை அங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று பிரதீப் கூறினார். இதனால் விசித்ரா கோவமடைந்து, ’இதுயெல்லாம் நீங்கள் சாப்பிடும்போது தெரியலையா?’ என்று கேட்டார். இதைத்தொடர்ந்து வீட்டில் கேப்டன் விஜய் வர்மாவிடம் இதையெல்லாம் நீங்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை என்று கூறினார்.
விஜய் வர்மாவும் பதிலுக்கு, நான் கேட்டவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். இதைத்தொடர்ந்து ‘நான் தோற்றுவிட்டேன் என்று பிரதீப் கூறினார். சிறிது நேரம் கழித்து நேற்று என்ன சாப்பிட வேண்டும் என்ற உணவுப் பட்டியலை என்னிடம் கேட்டவில்லை என்று கூறினார். இதற்கு விஜய் வர்மா ‘நான் கேட்டேன் ஆனால் நீங்கள்தான் துண்டை ஆட்டிக்கொண்டு இருந்தீர்கள் பதில் சொல்லவில்லை என்று கூறுவார்.
இதைத்தொடர்ந்து தனக்கு சிக்கன் 65 வேண்டும் என்று பிரதீப் கேட்டார். இது பெரிய சண்டையாக மாறும் என்று நினைக்கும்போது, அப்படி மாறாமல், உங்கள் குழுவிடம் சென்று ஆலோசனை செய்துவிட்டு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்று பவா செல்லதுரை கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து பிரதீப் சமையலறையில். உள்ள போட்டியாளர்களிடம் போட்டியை சுவாரஸ்யமாக மாற்ற சில வழிமுறைகளை சொல்லுவார். ஆனால் அதை யாரும் செய்யாமல் தவிர்த்துவிடுவார்கள்.
இறுதியில் ஒருவரை பற்றி வதந்தியை பரப்ப வேண்டும் என்றும் இதனால் சில வதந்திகளை வைத்து கதை சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் நடைபெற்றது. இதில் கூள் சுரேஷ் பற்றி சரவண விக்ரம் கதை சொல்கிறார். காலையிலிருந்து அழுது கொண்டிருந்த ஐஷு, மாலை நேரத்தில் பாடல் ஒளிபரப்பப்பட்டதும் நடனமாடினார். இந்நிலையில் இதை குறிப்பிட்டு, பவா செல்லதுறை அவரை வாழ்த்தி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.