தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த போட்டியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் இறுதியாக, ஆரி, பாலஜி, சோனு, ரியோ, ரம்யா, கியாபிரியல்லா ஆகியோர் மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளர். மற்றவர்கள் அனைவரும் வாரம் ஒருமுறை நடைபெறும் எலிமினேஷன் சுற்றில் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் தொடக்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.
இதில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டுமே மீண்டும் அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷிவானி, பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சகபோட்டியாளர் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்தார். இவர்களின் நெருக்கத்தால் பாலாஜிக்கும் ஆரிக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா அவரை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துவிட்டு சென்றார். இதனையடுத்து கடந்த வார இறுதியில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்து விட்டனர். ஸ்டோர் ரூமில் சாப்பாடு வந்துள்ளது என நினைத்து சென்ற சுசித்ராவுக்கு, அங்கே இருந்த பாய்க்குள் ஷிவானி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் வந்த ஷிவானி, பாலாவை கண்டுகொல்லாமல் அர்ச்சனாவை கட்டிப்பிடித்து பேசியுள்ளார். இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகி உள்ளது.
இதில் ஷிவானி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததை அறிந்த சகபோட்டியாளர்கள் சந்தோஷத்தில் உள்ள நிலையில், ஷிவானி வந்த்தை அறிந்த பாலா, ஓடிச்சென்று பார்த்தார். அப்போது ஷிவானி அவரை கட்டிப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷிவானி அவரை துளிகூட பொருட்படுத்தாமல், அவரை கிராஸ் பண்ணி அர்ச்சனா பக்கம் சென்றார். இதனால் பாலாஜி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். ஒரு வேளை வீட்டுக்கு சென்ற அவருக்கு அவரது அம்மாவின் எச்சரிக்கை கடுமையாக இருந்த்தா, அல்லது புரமோக்காக இப்படி செய்தாரா என்பது இன்று தெரிந்துவிடும்.
ஆனால் வெளியேறிய ஒரு வாரத்தில் ஷிவானி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பதால், வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்தே ஷிவானி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார், இதனால் வீட்டுக்கு சென்றிருக்க மாட்டார் என சிலர் கூறி வந்தாலும், பொங்கலை முன்னிட்டு வீட்டு வாசலில் ஷிவானி கோலம் போட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி சந்தேகத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"