எல்லாம் முடிஞ்சு போச்சுனு நினைச்சோம்.. ஆனா எதுவும் முடியல! மீண்டும் முகெனுக்காக போஸ்ட் போட்ட அபிராமி

நீ ஜெயிக்கப்பிறந்தவன்டா.. உன் அன்பு என்றும் அனாதை இல்லை

By: Updated: October 8, 2019, 10:55:10 AM

big boss tamil abirami venkatachalam : பிக் பாஸ் சீசன் 3. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய இந்த 3 ஆவது பிக் பாஸ் முதல் சீசனையே ஓவர்டெக் செய்து விட்டது எனலாம். காதல், சண்டை, தற்கொலை முயற்சி, அரசியல் என பலவிதமான சர்ச்சைகளை இந்த சீசன் பார்த்து விட்டது. இது எல்லாம் ரசிகர்களை ஒரு பக்கம் கடுப்பேற்றினாலும் சிலர் ஆர்வத்துடன் பார்க்கவும் தொடங்கினர்.

நேற்று முன் தினம் நிறைவு பெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார். ரசிகர்கள் அனைவரும் இதனை கொண்டாடி வரும் நிலையில் பிரபலங்களும் பிக்பாஸ் போட்டியாளர்களும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருந்தது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமி தான். இதனால் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. முதலில் கவினை காதலிப்பதாக விளையாடி வந்த அபிராமி அதன் பின்னர், முகெனிடம் நெருக்கம் ஆனார்.

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வந்தார் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி வெளியேறியபோது முகென் ஒரு சில நினைவு பரிசுகளை கொடுத்து அனுப்பி இருந்தார். இந்த பிரச்சனை இதோடு முடிந்து விட்டது. அபியும் முகெனும் இனி நல்ல நண்பர்கள் மட்டுமே என்பதை போல் தான் பேச்சுகள் தென்ப்பட்டன. மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அபிராமி முகெனிடம் பழகிய முறையும் அப்படித்தான் காட்டியது. முன்பு நடந்த தவறுக்காக முகெனிடம் அபிராமி மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்நிலையில், டைட்டில் வின்னராக தேர்வாகி இருக்கும் முகெனுக்கு அபிராமி வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் “‘நீ ஜெயிக்கப்பிறந்தவன்டா.. உன் அன்பு என்றும் அனாதை இல்லை. நீயே எப்போதும் சிறந்தவன்..’ எப்போதுமே நண்பர்கள் buddy” என்று கூறியுள்ளார்.

இந்த போஸ்ட் தற்போது வைரலாக தொடங்கியுள்ளது. அபிராமி மீண்டும் முகெனை காதலித்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Big boss tamil abirami venkatachalam twitter big boss abirami insta mugean rao

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X