big boss tamil today : பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே செல்கிறார்கள் முந்தைய பிக் பாஸ் போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா. போனவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? கண்டெண்ட் கொடுக்கவே புதிய பிரச்சனையை வீட்டில் கொளுத்தி போடுகிறார்கள்.
Advertisment
big boss tamil 3 :
பிக் பாஸ் 3 ஆவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 2 வாரங்கள் மட்டுமே மிச்சம் உள்ள நிலையில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கடுமையாக டாஸ்கில் விளையாடி வருகின்றனர். (கவினை தவிர) ஞாயிற்றுக்கிழமை இயக்குனர் சேரன் வெளியில் வந்தார்.அவரின் எவிக்ஷன் மிகப் பெரிய வாதத்தை சமூகவலைத்தளத்தில் ஏற்படுத்தியுள்ளது. கவின், லாஸ்லியாவுடன் ஒப்பிடுகையில் சேரன் சிறந்த போட்டியாளர் என்பது தான் மக்களின் கருத்து.
Advertisment
Advertisements
ஆனால் பிக் பாஸுக்கு பிடித்தது கவின் லாஸ்லியா என்பதால் அவர்களை சேவ் செய்து விளையாடி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சரி அது போகட்டும் வீட்டில் ஏற்கனவே ஒருபக்கம் ஐவர் கூட்டணியில் விரிசல் விட்ட நிலையில் மேலும் அதில் கொளுத்தி போடவும்,ஹவுஸ் மேட்ஸை உற்சாகப்படுத்தவும் பிக் பாஸ், முந்தைய பிக் பாஸ் போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகாவை உள்ளே அணுப்பி வைத்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு சென்று அனைவரையும் சந்திப்பது தான் இன்றைய நாளின் முதல் ப்ரமோ.
big boss promo 2:
சென்ற முறை பிக் பாஸ் சீசனில் அதிக கவனத்தை பெற்றவர்கள் தான் மகத் மற்றும் யாஷிகா. இவர்களின் காதல் கதை உலகம் அறிந்த ஒன்று. ஆனால் யாஷிகாவின் மிகச் சிறந்த முடிவு தைரியம் அந்த விவாதத்தை அப்படியே முடித்து வைத்தது. இன்று இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளே வந்து வேட்டையன் ராஜா டாஸ்க்கை வழி நடத்துகிறார்கள்.
வேட்டையன் ராஜா சொல்வதையெல்லாம் மற்ற ஹவுஸ் மேட்ஸ் செய்ய வேண்டும். இந்த டாஸ்கை சிரித்துக் கொண்டே யாஷிகா மற்றும் மகத் ரசிக்கிறார்கள்.
big boss promo 3 today:
எடுத்தவுடனே ஷெரீன் தான் டார்கெட் என்பது போல். யாஷிகா மற்றும் மகத் வீசும் வலையில் விழுகிறார் ஷெரீன். ஷெரீனிடம் பிக் பாஸ் வீட்டில் தனது விருப்பமான ஒருவருக்கு கடிதம் எழுத சொல்கிறார்கள். அந்த கடிதத்தில் பெயரை குறிப்பிடாமல் படுக்கறையில் வைத்துவிட்டு வர சொல்கிறார்கள்.
உடனே ஷெரீன் பக்கம் பக்கமாக எழுத, இதோ பாரு ட்விஸ்ட் என்று பிக் பாஸ், யாஷிகா மற்றும் மகத்தை கடிதத்தை உரிய நபரிடம் கொடுக்கும் படி சொல்கிறார். ஷாக்கான ஷெரீன் ஓடிசென்று வேக வேகமாக கடிதத்தை கிழித்து போடுகிறார். ஒட்டு மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்கிறது. அப்படி ஷெரீன் அந்த கடிதத்தில் என்ன எழுதி இருப்பார்? யாருக்கு எழுதி இருப்பார் என்பது பிக் பாஸை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.