big boss tharshan : பிக் பாஸில் “ எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்” என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்த கமல்ஹாசன் கடைசியில் அதற்கான உதாரணத்தை தந்து மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளரான தர்ஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸ் பட்டத்தை வெல்லாவிட்டாலும் மக்களின் மனதை அதிகம் வென்றவர் தர்ஷன் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. போட்டியை போட்டியாக பார்த்து சக போட்டியாளரிடம் நேர்மையாக பழகி பிக் பாஸ் பட்டத்திற்கு அனைத்து தகுதிகளையும் பெற்று முதலிடத்தில் இருந்து தர்ஷன் திடீரென்று சென்ற வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
Advertisment
எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் பெற்றததால் தான் தர்ஷன் வெளியே அனுப்பபட்டதாக கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். ஆனால் அதை தர்ஷன் ரசிகர்கள் இப்போது வரை நம்பவில்லை. சமூகவலைத்தளங்களில் தர்ஷனுக்கு ஆதரவாக குரல்கள் பதிவுகள் இன்னும் சென்றுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், ஏற்கனவே சோகத்தில் இருக்கும் தர்ஷனுக்கு தற்போது மற்றொரு சோகமும் நிகழ்ந்துள்ளது. அவரின் நெருங்கிய பெண் தோழியும், தர்ஷனுக்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய ஆதரவை வெளியில் சமூகவலைத்தளங்களில் திரட்டிக் கொண்டிருந்த சனம் ஷெட்டி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தனது தோழியை சந்தித்து தர்ஷன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இந்நிலையில் சனம் ஷெட்டி ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். தற்போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சனம் உருக்கமான ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்.
அதில் ”சில நாட்களுக்கு முன்பு எனக்கு ட்யூமர் இருப்பது பற்றி தெரிய வந்தது. ஆனால் அதை நான் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். அதனால் இப்போது அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். என்னுடைய சிறிய அறிவுரை என்னவென்றால் உங்கள் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். எனக்காக கடவுளிடன் பிரார்த்தனை செய்யுங்கள்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தர்ஷனுக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரின் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.