தந்தையானார் பிக்பாஸ் மகத் : ட்விட்டரில் அவரே வெளியிட்ட புகைப்படம்

Bogboss Actor Mahat : பிக்பாஸ் நடிகர் மகத் பிராச்சி தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக மகத் தனது ட்விடடர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்த வல்லவன் மற்றும் காளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகத். அதனைத் தொடர்ந்து அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து பிரபலமான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் மேலும் இவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து வந்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்களின் காதல்கதை பெரிதும் பேசப்பட்ட நிலையில்,  திடீரென மகத் காதலை முறித்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மஹத் பிராச்சி என்ற மாடல் அழகியை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த்து. இதனைத் தொடர்ந்து பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகத் புகைப்படம் வெளியிட்டிருந்தார்.

இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை எதிர் நோக்கி காத்திருந்த நிலையில் மகத் மனைவி பிராச்சிக்கு நேற்று (ஜூன் 7) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மஹத் ‘தாயும் சேயும் நலம்’ என்று பதிவிட்டுள்ளார். அப்பாவான மஹத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigboss celebrity actor mahat prachi mishra couple bleesed boy baby

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com