கடந்தமுறை ஷிவானி… இந்த முறை இவரா? பிக் பாஸ் 5 எகிறும் எதிர்பார்ப்பு

Serial actor Azeem might join in Bigboss season 5 Tamil News: இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் பெரும்பாலோனோர் விஜய் டிவி பிரபலங்களாகதான் இருந்தனர். ஒரு சிலர் மட்டுமே அறியாத முகங்களாக இருந்தனர்.

Bigboss season 4 Tamil News tamil serial actor Azeem might join in Bigboss season 5 tamil

Bigboss season 4 Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்றாக உள்ளது. மிக விறுவிறுப்பாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் ஆரி அர்ஜுன் வெற்றி பெற்றார். மிகவும் எதிர்பாக்கப்பட்ட பாலாஜி முருகதாஸ் 2ம் இடம் பிடித்தார்.

இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் பெரும்பாலோனோர் விஜய் டிவி பிரபலங்களாகதான் இருந்தனர். ஒரு சிலர் மட்டுமே அறியாத முகங்களாக இருந்தனர். மேலும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக நிகழ்ச்சி தாமதமாகவே தொடங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்க வந்த போட்டியாளர்கள் முதல், செட்டில் வேலை செய்பபவர்கள் வரை அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதோடு நிகழ்ச்சிக்கு இடையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகியோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த தொகுப்பாளினி அர்ச்சனா இறுதி வரை போராடினார். ஆனால் மற்றொரு வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த ரேடியோ தொகுப்பாளினி சுசித்ரா சில வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடித்தார். இவர்களோடு சீரியல் நடிகர் ‘அஸீம்’ வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவரால் போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு சமயத்தில் அவரை பிக் பாஸ் ஷிவானி நாராயணன் உடன் இணைத்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வந்தன. ஆனால் “நான் விவாகரத்து செய்துவிட்டேன், இப்போது சிங்கிள் தான்’ என்று கூறி வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்திருந்தார். மேலும் தனது அம்மாவிற்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதால் தான் பிக்பாஸில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸின் 5வது சீசனில் சீரியல் நடிகர் ‘அஸீம்’ கலந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை நிச்சயம் அவர் கலந்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigboss season 4 tamil news tamil serial actor azeem might join in bigboss season 5 tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com