முடியும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா? ரசிகர்கள் குழப்பம்!

ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, விஜயலட்சுமி

பிரபல தனியார் தொலைக்காட்சியில் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்ச்சி ஒளிப்பரப்பில் புதியதொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 :

பிரபல தனியா தொலைக்காட்சியில்  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி  ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிக்ழச்சி ஆகும். இந்தி மொழியிஉல் 12 சீசன்களை கடந்து ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தான் முதன் முதலாக தமிழில்  ஒளிபரப்பாகியது.

பிக் பாஸ் சீசன் 1 மிகப்பெரிய வெற்றி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வெற்றியைத் தொடர்ந்து  ஜூன் மாதம் 17 ஆம் தேதி பிக் பாஸ் 2 வும் ஆரம்பமானது. முதலில் 100 நாட்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி மேலும் 6 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாக இருக்கிறது.  இதன் காரணமாக இதுவரை பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்ட நேரத்தில் இருந்து வரும் நாட்களில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2

பிக் பாஸ் 2

வரும் 24-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு அரண்மனை கிளி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. எனவே தற்போது இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் `பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி 24-ம் தேதி முதல், இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 வில் தற்போது ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, விஜயலட்சுமி ஆகிய 6 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் 4 பேர் ஃபைனலுக்கு செல்வார்கள். இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க  பரபரப்புகள் மற்றும் எதிர்பார்ப்பு  அதிகரித்துக் கொண்டே  செல்கின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close