நல்லவர் யார்? கெட்டவர் யார்? விளக்கம் அளிக்கிறார் கமல் ஹாசன்!!!

பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான “பிக் பாஸ் சீசன் 2” அடுத்த டீசரை நேற்று வெளியிட்டுள்ளது விஜய் டிவி நிகழ்ச்சியின் குழு.

ஒரே வீட்டில் 60 கேமராக்கள் சுற்றி உளவு பார்த்துக்கொண்டிருக்க 100 நாட்கள் பிரபலங்கள் தங்கியிருக்க வேண்டும். உண்மையாக நேர்மையாகவும் உள்ளவர் எலிமினேஷன்களை கடந்து 100 நாட்கள் அந்த வீட்டில் தங்கி, பிக் பாஸ் பட்டம் வென்று வெளியேறுவார்கள். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முதன் முதலில் துவங்கியது லண்டன் தொலைக்காட்சி தான். பின்னர் அவர்களிடம் இருந்து பாலிவுட்டிற்கும், தற்போது பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கும் இடம்பெயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ் மக்களிடையே விஜய் டிவியால் அறிமுகப்படுத்தப்பட்ட “பிக் பாஸ்” பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் 1 டைட்டில் வெற்றியை ஆரவ் வென்றாலும் மக்களின் மனதைக் கவர்ந்தது என்னமோ ஓவியா தான். சென்ற சீசனை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இவர், சென்ற மே 12ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் “பிக் பாஸ் 2” முதல் டீசரை வெளியிட்டார். 15 வினாடிகளில் கமல் ஹாசனின் ஒரே சொடுக்கில் முடிவடைந்தது அந்த டீசர்.

இதையடுத்து நேற்று இரவு 8 மணியளவில், விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கான 2ம் டீசரை வெளியிட்டது. சுமார் 1 நிமிடம் 5 வினாடிகள் நீடிக்கும் இந்த டீசரில், யார் நல்லவர், யார் கெட்டவர்? ஒருவரை எப்படியெல்லாம் தவறாக புரிந்துகொள்கிறோம் என்ற கருத்தை கூறியுள்ளார் கமல்.

ஜூன் மாதம் தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மன்னை சாதிக், லஷ்மி மேனன், வடிவேலு பாலாஜி ஆகிய பிரபலங்கள் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இது உறுதியான தகவலா என்பதை நிகழ்ச்சி தொடங்கும் வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

×Close
×Close