இதை எதிர்பார்க்கவே இல்லை: வனிதாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

ஜோதிகாவின் காற்றின் மொழி, 36 வயதினிலே  போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றன.

By: Updated: January 29, 2021, 06:26:40 AM

Vanitha Vijayakumar Tamil News: பிக் பாஸ் 3 புகழ் வனிதா விஜயகுமார் மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பெண்கள் வாழ்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தை ஆதம் தாசன் இயக்குகிறார். 2 017ல் மனோபாலா தயாரிப்பில்  பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பாம்பு சட்டை’ திரைப்படம் வெளியானது.

படத்திற்கு ‘அனல் காற்று’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சூது கவ்வும் திரைப்படத்தில் அருமை பிரகாசம் என்ற வேடத்தில் நடித்த கருணாகரனும் இப்படத்தில் நடிக்கிறார்.

சமீப கால தமிழ் சினிமாக்களில் பெண்களை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.  ஜோதிகாவின் காற்றின் மொழி, 36 வயதினிலே  போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றன. எனவே, வனிதா விஜயகுமார் மீண்டும் தமிழ் சினிமாக்களில் திரும்பவது நல்ல தொடக்கமாக காணப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடிப்பதற்கான திறனும் அவரிடம் காணப்படுகிறது.

1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் வனிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2015ல் வனிதா தயாரித்த ‘எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்’ பெரிய வெற்றியை அடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 3 fame vanitha vijayakumar return to big screen anal kattru adam dasan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X