Advertisment

Bigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள்ள இந்த போட்டியாளரா? ப்ளீஸ் வேணாம் ஆளை மாத்துங்க - ரசிகர்கள் அதிருப்தி

கணவன் - மனைவிக்கு பதில், யாராவது காதல் ஜோடியை உள்ளே அனுப்பினால் எங்களுக்கும் பொழுது போகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss 3, kamal haasan

Bigg Boss

Bigg Boss season 3: இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது.

Advertisment

2017-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிய இந்நிகழ்ச்சியை மூன்றாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்களில் ஜாங்கிரி மதுவிதாவும், கர்நாடக இசைப் பாடகர் மோகன் வைத்யாவும் ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டு விட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் இவர்கள் தான்!

இந்நிலையில் மோகன் வைத்யா வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். இதற்கு காரணம் என்னவெ ந்றால், கடந்த சீசனின் போட்டியாளராக ஆனந்த் வைத்யா களம் இறங்கினார். ஆனால் வயதைக் காரணம் காட்டி, எந்த டாஸ்க்கும் செய்யாமல், எப்போது வெளியே போவோம் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தார். இது ரசிகர்களிடம் ஒருவித சோர்வை ஏற்படுத்தியது.

ஆக, இந்த முறை மோகன் வைத்யா சென்றாலும் இதையே தான் செய்வார். ஆளை மாற்றுங்கள் என சம்பந்தப்பட்ட சேனலிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள் ரசிகர்கள். தவிர அந்த சேனலில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான, ’மைனா’ நந்தினி, ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் போட்டியாளராக என்னை அழைத்தால், செல்வதற்கு ரெடி என சில தினங்களுக்கு முன்பு ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார். ஆகையால் அவர் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தவிர, வயதான காமெடியன்கள், வில்லன்களை போட்டியாளர்களாக்காதீர்கள். எப்படியும் அவர்கள் டாஸ்க் செய்யப் போவதில்லை. கணவன் - மனைவிக்கு பதில், யாராவது காதல் ஜோடியை உள்ளே அனுப்பினால் எங்களுக்கும் பொழுது போகும் என்கிறார்கள் ரசிகர்களும் மீம் கிரியேட்டர்களும்.

Kamal Haasan Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment