Bigg Boss Season 3 Nomination Promo : பிக்பாஸ் 3 சீசன் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. ஜெர்க் ஆகாதீங்க... போட்டியாளர்கள் இடையே பிரச்சனை ஆரம்பித்தால் தானே பிக்பாஸில் சுவாரஸ்யம் இருக்கும். அப்படித்தானே...? அதன்படி பார்க்கையில், முதல் வாரம் செண்டிமெண்ட் வாரமாக அமைய, இரண்டாவது வாரம் ஆக்ஷனுடன் தொடங்கி இருக்கிறது.
அந்த ஆக்ஷனுக்கு 'தமிழ்ப் பொண்ணு' என்ற கேப்ஷனுடன் மதுமிதா பிள்ளையார் சுழி போட்டு வைக்க, 'உங்களுக்கு மட்டும் தான் கலாச்சாரம் இருக்கா..? எங்களுக்கு இல்லையா?.. சும்மா தமிழ்ப் பொண்ணு, தமிழ்ப் பொண்ணு-னு சொல்லிக்கிட்டு' என்று ஷெரீன் வெடிக்க, 'துள்ளுவதோ இளமை' ஷெரீனா இவ்வளவு கோவப்படுவது? என்று 90-ஸ் கிட்ஸ் மிரட்சியுடன் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர். உனக்கு முன்னாடி பிறந்த தமிழ்ப் பொண்ணு-மா நானு என்று வனிதாவும் மதுமிதாவை எதிர்க்க, தனது தோழிகளுக்காக என்ன உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் கவின், மதுமிதாவிடம் சண்டைக்கு போக என்று, போர்க்களமாக மாறி இருக்கிறது பிக்பாஸ் 3 சீசன் வீடு. இதுல மீரா மிதுன் வேறு 'நானும் இருக்கேன்' என்று கண்ணில் படும் எல்லோரிடமும் ஏதாவது உளறி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பிரச்சனைகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, முதல் நாமினேஷன்பிராசஸ்-ஐ பிக் பாஸ் ஆரம்பித்துவிட்டார். அதற்கான புரமோ இன்று வெளியாகியுள்ளது.
அதில், எதிர்பார்த்தது போலவே அபிராமி, சாக்ஷி, மீரா ஆகியோரின் பெயர்கள் அதிகம் நாமினேஷன் செய்யப்பட, நம்ம சேரனையும் போட்டுக் கொடுக்கிறார் ஒரு போட்டியாளர். அதுமட்டுமில்ல, பெண்களின் கனவுக் கண்ணனான கவினையும் ஒரு பெண் போட்டியாளர் நாமினேட் செய்கிறார். எல்லாத்தையும் விட, அழகு தேவதை லோஸ்லியாவையே ஒருவர் நாமினேட் செய்கிறார் என்றால், அவரது இதயம் இரும்பால் தானே படைக்கப்படிருக்கும்!