Bigg Boss Tamil 3 Promo : பிக்பாஸ் மூன்றாம் சீசனில், மக்கள் யாரை அதிகம் வெறுத்தார்களோ(?) அவரை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர். ஃபாத்திமா பாபு தான் அந்த அதிர்ஷ்டசாலி. சாக்ஷி, கவின் உட்பட அனைத்து போட்டியாளர்களும் காப்பாற்றப்பட ஃபாத்திமாவை வெளியேற்றியுள்ளது பிக்பாஸ். பின்னே.. வீட்டுக்குள்ள எப்பவுமே சிரிச்ச முகத்தோட இருந்தா இருக்க விடுவோமா நாங்க??. அதான், தலைக்கு 50 முறை ஓட்டு போட்டு குத்திட்டோம்ல..
சரி விஷயத்துக்கு வருவோம்... நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதன் முதலாக வெளியில் இருந்து நேயர் ஒருவர் போட்டியாளர்களில் யாரேனும் ஒருவரிடம் ஒரேயொரு கேள்வியை மட்டும் கேட்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வைத்தது பிக்பாஸ் டீம். இதைக் கேட்ட நாமும் குஷியாக, லைனில் வந்த ஒரு பெண், கவினிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றார். அட்றா சக்க... கவின் தொலைஞ்சான் இன்னைக்கு-ன்னு நாம் நினைக்க, 'வீட்டுல நீங்க எந்த பெண்ணை உண்மையா காதலிக்கிறீங்க?'-னு கேட்க, 'இதைக் கேட்கவா போன் பண்ணீங்க?'-னு நமக்கு பதிலாக கவினே, அப்பெண்ணை கலாய்த்துவிட்டார்.
ஆனால், அவர் கேட்ட கேள்வி சரியே. பிக்பாஸ் வீட்டில் உள்ள அபிராமி கவினை விரும்புகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கவின் சாக்ஷியோடும் கொக்கி போடுகிறார். லோஸ்லியாவிடமும் ஜலஜாக் செய்கிறார். இதை மனதில் கொண்டே அப்பெண் கேள்விக் கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள பிக்பாஸ் புரமோவில் கவினிடம் கிசுகிசுக்கும் சாக்ஷி, "உன் நடத்தையில் நான் நிறைய மாற்றங்களை பார்க்கிறேன். உன் மனசை தொட்டுப் பாரு. திடீர்-னு உனக்கு லோஸ்லியா-வோட பேசுறது பிடிச்சிருக்குது என்பதால, நீ அவளிடம் பேசிட்டு இருக்கியா? இது உண்மையா நடந்துக்கிறது அல்ல" என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க, 'இல்ல மச்சான்... எல்லோருடன் எப்படி பேசுறானோ அப்படித் தான் பேசிட்டு இருக்கேன்' என்று கவின் சமாளிக்க காதல் கதகளி ஸ்டார்ட்ஸ்.
இன்னொரு பக்கம், நேற்று எவிக்ஷன் போது, வனிதா டீமோடு மீரா இணைந்து கொண்டு, மதுவை விமர்சிக்கும் பாயிண்ட்டை முன் வைத்து, 'மீரா வீட்டில் இருந்து வெளியேற வேண்டும்' என லோஸ்லியா சொல்லி இருந்தார்.
ஒன்னும் இல்லாத விஷயத்துக்கே ஆத்து ஆத்து-னு ஆத்தும் மீரா, உனது இந்த கருத்தால் ரொம்ப அஃபெக்ட் ஆகிட்டேன்னு லோஸ்லியாவிடமே ஆத்திக் கொண்டிருந்தார். 'என்னைப் பார்த்து அப்படி சொல்லிட்டியே... என் தோழியே என்னை அப்படி பேசியது ரொம்ப காயப்படுத்திட்டு. உன்னை தோழியாக நினைத்தது என் தவறு என்பதை புரிஞ்சுக்குறேன்' என்றார். அதற்கு லோஸ்லியா, 'எனக்கு எல்லோரும் பிரெண்ட்ஸ் தான். நீங்க அப்படி தப்பா எடுத்துக்கிட்டதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது' என்று பதிலடி கொடுக்க, மீரா அம்மணிக்கு மூஞ்சே செத்துப் போச்சு.
Bigg Boss Promo : இந்த வார டார்கெட்
சாக்ஷியோட அடுத்த டார்கெட் லோஸ்லியா...
அபிராமியோட அடுத்த டார்கெட் இந்த வார கேப்டன் பதவி...
ஷெரினோட அடுத்த டார்கெட் குரூப்புல டூப் போடுறது...
கவினோட அடுத்த டார்கெட், பிக் பாஸ் செட்டை சுத்தம் செய்ய வரும் ஆயாவை உஷார் செய்வது
வனிதாவோட அடுத்த டார்கெட், வழக்கம் போல இவங்க எல்லோரையும் வச்சு வீட்டுல கும்மாங்குத்து போடுறது!!.