Advertisment

'தலைமை தன்னிலை உணர்ந்து தன்னிச்சையாக செயல்படணும்; இல்லையெனில்....' - யாரைச் சொல்கிறார் கமல்ஹாசன்?

பிக்பாஸ் புரமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் தோன்றும் கமல்ஹாசன், "தலைமை தன்னிலை உணர வேண்டும். தன்னிச்சையாக செயல்பட வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும் என்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 latest news, Bigg Boss Tamil 3 today news, கமல்ஹாசன்

Bigg Boss Tamil 3 latest news, Bigg Boss Tamil 3 today news, கமல்ஹாசன்

Bigg Boss Promo : பிக்பாஸ் 3 சீசனில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் வார இறுதி இதோ வந்துவிட்டது. கூடவே, இன்றைய பிக்பாஸ் புரமோவும் வந்துவிட்டது.

Advertisment

பிக்பாஸ் 3 தமிழ் சீசனில், கடந்த வாரம் பாத்திமா பாபு, நேயர்களின் விருப்பப்படி(?) வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதாவது, எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில், பாத்திமா பாபுவுக்கு தான் குறைந்த ஓட்டுகள் கிடைத்தது என்பதன் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இந்த வாரமும் மதுமிதா, வனிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட, யார் இம்முறை வெளியேறப் போவது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வனிதா மீது எப்படியும் நேயர்கள் அன்பு மழை பொழிந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிக்பாஸ் என்ன கணக்கு போட்டு வைத்திருப்பார் என்று யாருக்கும் தெரியாதல்லவா. ஆகையால், வெளியேறப் போவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படியும், ஆண்டவர் அதை நாளை தான் அறிவிப்பார் என்பதால், இன்று யார் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் புரமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் தோன்றும் கமல்ஹாசன், "தலைமை தன்னிலை உணர வேண்டும். தன்னிச்சையாக செயல்பட வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும். அப்படி இல்லைனா என்ன நடக்கும் என்பதை இத்தனை நாளாக பார்த்துட்டோம். இப்போது நாமும் இருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்தும் நேரம் வந்துவிட்டது" என்று லீட் கொடுத்து அந்த புரமோவில் பேசி இருக்கிறார்.

இவரு யாரை சொல்றாருன்னு புரியலையே!! வீட்ல உள்ளவங்களா சொல்றாரா? இல்ல நாட்டுல உள்ளவங்களா சொல்றாரா?.

Kamal Haasan Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment