Bigg Boss Promo Today: நடப்பு பிக்பாஸ் சீசனில், மக்கள் மிகவும் விரும்பிய வாரம் என்றால் அது இந்த வாரம் தான். பாரம்பரிய கிராமிய டாஸ்க் வைத்து பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல சர்ப்ரைஸ் கொடுத்து, நமது கிராமிய கலைகளின் தகவல்களையும் தெரிந்து கொள்ள வைத்தார் பிக்பாஸ்.
பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த ஸ்ரீனிவாச நாடக மன்றத்தின் கிராமிய குழுவினர், "மனிதனின் உடல் மொழி வளர்வதற்கு முக்கியமான காரணமாக இருந்தது தெருக்கூத்து கலைதான். இன்று திரையுலகத்தில் இருக்கிற மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் தெருக்கூத்தின் வழியாக தங்களது உடல் மொழியை வளர்த்துக்கொண்டவர்கள். தெருக்கூத்தின் பாரம்பரியம் 500 வருடங்களுக்கு மேற்பட்டது. 12 மாவட்டங்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக தெருக்கூத்து கலைஞர்கள் இருக்கிறார்கள். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து குழுக்கள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 400 முதல் 500 குழுக்கள்தான் இருக்கிறது.
உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்களும் தெருக்கூத்தை ஆடுகிறார்கள். ஒடுக்கிவைக்கப்பட்டவர்களும் வறுமையில் வாடும் மக்களும் தெருக்கூத்தை நிகழ்த்துகிறார்கள். வறுமையில் வாடும் மக்கள் ஆடும் கூத்தை கணியன் கூத்து என்றும் வசதிப்படைத்தவர்கள் ஆடும் கூத்தை ஊலி கூத்து என்றும் கூறுவார்கள்" என்று விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் தெருக்கூத்தை நிகழ்த்திக்காட்டினர். தொடர்ந்து போட்டியாளர்கள் கலைக்குழுவுடன் சேர்ந்து தெருக்கூத்து பயிற்சி பெற்றனர். பயிற்சி முடிந்தபின் இரு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இன்று(ஆக.31) வெளியிடப்பட்ட பிக்பாஸ் புரமோவில், தர்மபுரி ஸ்ரீனிவாச நாடக மன்ற குழுவினர் பிக்பாஸ் மேடையில் கூத்து நடத்த, கமல்ஹாசனும் அவர்களுடன் இணைந்து கூத்து கட்டியிருக்கிறார்.
இதற்காக இன்றைய ஷோவை பார்க்கலாம் போலிருக்கே!!