Bigg boss tamil 3 : பிக் பாஸில் வனிதாவின் எலிமேஷனுக்கு பிறகு கடந்த சில நாட்களாக கவின், சாக்க்ஷி, லாஸ்லியா ஆகிய மூவருக்கு நடந்த முக்கோண காதலை தான் திருப்பி திருப்பி காண்பித்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் கவினின் அட்ராசிட்டி பார்பதற்கே கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தி இருந்தது.
"எப்பதாப்பா இதுக்கு எண்டு கார்ட் போடூவீங்க" என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாக்லெட்டால் ஆரம்பித்த சண்டையை நேற்றைய தினம் சாக்லெட்டால் முடித்து வைத்தார் பிக் பாஸ் நாயகன் கமல்ஹாசன்.
நட்பா? காதலா? கவினா? என மூன்றெழுத்து வித்தை வைத்தே கவினுக்கு சரியான பாடத்தை புகட்டினார். தனது தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்பும் கேட்டார் கவின். ரெண்டு பொண்ணுங்களோட நிஜ ஃபீலிங்க்ஸ் கூட விளையாடினது மிகப்பெரிய தவறு என கவின் ஒப்புக் கொண்டது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இதற்கு கமல கையில் எடுத்தது சூப்பர்ஹிட் கிளாசிக் காமெடியான கவுண்டமணி-செந்தில் இணையின் வாழைப்பழ காமெடி தான். அதனைத் தொடர்ந்து இந்த கதையில் சம்மந்தப்பட்ட சாக்ஷி மற்றும் லொஸ்லியாவிடமும் கமல்ஹாசன் பீலிங்ஸ் குறித்து விளக்கினார். அப்போது பேசிய சாக்ஷி, ‘அவன் சொன்ன வார்த்தைய காப்பாத்தல. அவனால மனதளவில் நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். அதுல இருந்து வெளியே வர எனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்’ என்றார். இதே லொஸ்லியா மெல்லிய சிரிப்புடன் ‘நான் ஓகே. குட். ஓம்’ என்று கூறி முடித்தார்.
பின்னர், கவினிடம் 2 சாக்லெட்டுக்கள் கொடுக்கப்பட்டது அவர், அதை லொஸ்லியா மற்றும் சாக்ஷிக்கு கொடுத்து மன்னிப்புக் கேட்டார். ‘இந்த பிரச்சனைக்குள் இவ்வளவு தான் பேச முடியும்.. மீறினால் தனிமனித சுதந்திரத்தில் பங்கேற்கும் விதமாக இருக்கும்.. நான் அப்பாவாக பேசுகிறேன் என நாட்டமை தீர்ப்பை கூறினார் கமல்ஹாசன்.
குறும்படம் ஹைலைட்:
கடந்த வெள்ளிக்கிழமை ஜெயிலுக்குள் முற்றிய மீரா - சாக்ஷி சண்டைக்கு குறும்படம் பதில் கூறியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக் டிக் டிக் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் மீரா- கவின் - சாண்டி இடையேயான மீட்டிங் பற்றிய குழப்பத்திற்கு குறும்படம் தெளிவுப்படுத்தியது. மீட்டிங்கை ஏற்பாடு செய்தது சாக்ஷி தான் என கடைசி வரை நின்று போராடினார் மீரா. ஆனால் சாக்ஷி அதை மறுத்தார். கடைசியில் கமல்ஹாசன் போட்டுக் காட்டிய குறும்படத்தில் சாக்ஷி தான் முதலின் மீட்டிங்கை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியது போட்டியாளர்களுக்கு தெரிய வந்தது.