bigg boss 3 winner 2019 bigg boss promo kamalhaasan vijay tv - பிக்பாஸ் சீசன் 3 வின்னர் யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசன் நாளை(அக்.06) முடிவடைகிறது. கமல்ஹாசன் கைகளால் பிக்பாஸ் வின்னர் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Advertisment
அந்த பிக்பாஸுக்கே பிடித்த சாண்டியா, இளைஞர்களை ஈர்த்த லோஸ்லியாவா, ஆர்ப்பாட்டம் இல்லாத ஷெரீனா, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலராக வலம் வரும் முகேனா... யார் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூகுகளை போட்டு ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சில புரமோக்களை பிக்பாஸ் டீம் வெளியிட்டுள்ளது.
கடந்த இரு சீசனிலுமே டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டு, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர்கள் பிக்பாஸ் பட்டத்தை வென்றதில்லை. இந்த சீசனில், டாஸ்க் புள்ளிகள் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர் முகென். அப்போ, லாஜிக் படி முகேனுக்கு பட்டம் கிடையாது என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், கமல்ஹாசன் அடிக்கடி ஒரு வார்த்தையை உச்சரிக்கிறாரே... 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்று!.