scorecardresearch

ஓயாத பிக் பாஸ் சர்ச்சை; ஆரியின் வெற்றிக்கு அனிதா காரணமா?

Bigg boss 4 controversy twitter fight between anitha sampath and libra production ravindar: அனிதா, பாதி ஆடியோ தான் வெளிவந்துள்ளது, உண்மை என்னவென்றால், ஆரியின் வெற்றிக்கு நீங்க காரணமா என்பது தான் என்னுடைய கேள்வி, இது ஆரிக்கு எதிரானது அல்ல, நான் ஆரிக்கு எப்போதும் ஆதரவாக தான் இருந்தேன், இவர் தான் திரித்து கூறுகிறார், என லிபரா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் ஒளிப்பரப்பாகியுள்ள நிலையில், 4 ஆவது சீசன் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பேர் போகியுள்ளது. போட்டியாளர்கள், நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட சண்டையை விட வெளியில் அதிக சண்டையிட்டு கொள்கின்றனர்.

இதற்கு தொடக்க புள்ளி, பிஹைண்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழா. அந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜிக்கு விருது வழங்கப்பட்டது. விருது வாங்கியவர், பிக் பாஸ் போட்டியாளர்களை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டியது என்று பேசியிருப்பார். ஆனால் இந்த பேச்சு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான போது இடம் பெறவில்லை. இதனால் பாலாஜி விருதை திருப்பி அளித்துள்ளார்.

பாலாஜி விருதை திருப்பிக் கொடுத்ததற்கு ஆதரவாக பேசி சக போட்டியாளர் அனிதா சம்பத் ஆடியோ வெளியிட்டார். அதன் பிறகு காசு கொடுத்து தான் தனக்கான ஆதரவை திரட்டி ஆரி வெற்றி பெற்றார் என அனிதா பேசியதாக ரசிகர்கள் அவர் மீது கோபமடைந்தனர்.

ஆனால் அனிதா, பாதி ஆடியோ தான் வெளிவந்துள்ளது, உண்மை என்னவென்றால், ஆரியின் வெற்றிக்கு நீங்க காரணமா என்பது தான் என்னுடைய கேள்வி, இது ஆரிக்கு எதிரானது அல்ல, நான் ஆரிக்கு எப்போதும் ஆதரவாக தான் இருந்தேன், இவர் தான் திரித்து கூறுகிறார், என லிபரா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “உங்களை கடந்த இரண்டு நாட்களாக கண்டுகொள்ளாமல் தான் இருந்தேன். அமைதியாக இருந்தேன். நான் உங்களை பற்றியோ, ஆரியை பற்றியோ பேசவில்லை. நீங்கள் தேவையில்லாமல் என் பெயரை இழுத்து புகழ் பெற பார்க்கிறீர்கள். ஆரி ரசிகர்களை எனக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறீர்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது தான் நான் பேசுகிறேன். “

“நான் ஆரிக்கு தான் ஆதரவு தெரிவித்தேன். ஆரியின் வெற்றிக்கு அவர் தான் காரணம், விமர்சனம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இதில் எந்த தவறும் இல்லை. இவர் எல்லோரையும் திசைதிருப்ப பார்க்கிறார். நான் பாலா அல்லது ஆரிக்கு எதிரானவள் கிடையாது”

“இவர் பெண் போட்டியாளர்களை, குறிப்பாக என்னை. தரம் தாழ்த்தி பேசுகிறார். கடைசி வாரத்தில் நான் ஆரியுடன் போட்ட சண்டையை தவிர அவருக்கு எப்போதும் ஆதரவாக தான் இருந்தேன். ‘கப்போட வாங்க ஆரி’ என நான் தான் சொல்லிவிட்டு வந்தேன்” என அனிதா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அனிதாவின் ட்விட்களுக்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், ”இதை வெளியிட ஆறு மாதம் தேவை இல்லை. 28 ஜனவரி அன்று செய்த அழைப்பு அது. 1 மணி நேரம் 21 நிமிடம் பேசினோம். தற்போது தான் பாலாஜி எனக்கு போன் செய்து உங்களது கீழ்தரமான நடவடிக்கையை பற்றி பேசினார். அனிதாவின் முழு ஆடியோவை நான் பொதுமக்களுக்கு விரைவில் வெளியிடுகிறேன்”.

”அனிதாவின் உண்மை முகம் வெளி வந்துவிட்டது. வெட்கமா இல்ல அனிதா, பாலாவையும் பாலாவின் ரசிகர்களையும் நீ கொச்சைப்படுத்துற, மக்கள் ஆடியோவை கேட்டு எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளட்டும், ஆரியின் வெற்றியை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாம பேசுனத நீ ரெக்கார்ட் பண்ணி பாலா வெளியிட்டுருக்கார். நீ எனக்கு தைரியம் இருக்கானு கேக்குற” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 4 controversy twitter fight between anitha sampath and libra productions ravinder