பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள சுரேஷ் சக்ரவர்த்தியை புதிய போட்டியாளராக சென்றுள்ள அர்ச்சனா மொட்டை என்று அழைப்பதை விமர்சித்துள்ள பிரபல நடிகர் அவர் யார் தெரியுமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக 16வது நாளை நிறைவு செய்துள்ளது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி, சக போட்டியாளர் அனிதா சம்பத், ரியோ ராஜ் ஆகியோர் அவருடன் கடுமையாக முரண்பட்டு வருகின்றனர். முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி - அனிதா சம்பத் சண்டைதான் சமூக ஊடகங்களில் ட்ரோல் ஆனது. பலரும் அவரை டார்கெட் செய்வதால் அவருக்கு ஒரு அனுதாப ஆதரவு அலை பார்வையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
யார் இந்த சுரேஷ் சக்ரவர்த்தி
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மொட்டை அடித்துக்கொண்டு போட்டியாளராக உள்ளே சென்றுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி முதலிலேயே கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று கணிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்த சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு சமையல் கலைஞர். ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அதோடு, அவர் சக்ஸ் கிட்சன் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
ஆனால், அவருடைய வயது, அவர் யார் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் அனிதா சம்பத், ரியோ ராஜ், சனம் ஷெட்டி என அனைவரும் அவருடன் மல்லுக்கட்டுகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் புதிய போட்டியாளராக சென்றுள்ள அர்ச்சனா, 2வது நாளிலேயே அவர் ஓவர் ஆக்டிங் என்று பெயர் எடுத்துவிட்டார். அர்ச்சனா பலமுறை சுரேஷ் சக்ரவர்த்தியை மொட்டை மொட்டை என்றும் ஒருமையிலும் பேசி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகை சுஜா வருணியின் கணவருமான சிவ குமார், பிக் பாஸ் வீட்டில், நடிகை அர்ச்சனா, சுரேஷ் சக்ரவரத்தியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதைக் கண்டித்து விமர்சனம் செய்துள்ளார். அதோடு, சுரேஷ் யார் தெரியுமா என்றும் அவர் மம்முட்டியின் அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதையும் அவரைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களையும் கூறியுள்ளார்.
நடிகர் சிவகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் “கலாநிதி மாறனை நேரடியாக அணுகிய சிலரில் சுரேஷும் ஒருவர். அவர்களின் ஆரம்ப நாட்களில் சன்நெட்வொர்க்கின் தலைமை மேற்பார்வையாளர்களில் ஒருவராக இருந்த சுரேஷ் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்தார். சந்தோக் அல்லது அவரது பெயர் எதுவாக இருந்தாலும் அவரது "காமெடி டைம்" நாட்களை மறந்துவிட்டதாக நினைக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"