Advertisment

'அம்மா திட்டுனதை மன்னிச்சுடு மச்சான்..!' ரீல் வீடியோவா? ரியல் வீடியோவா?

Bigg Boss 4 Tamil Balaji Shivani Viral Insta Reels 'ஷிவானிக்கு பதிலாக அவருடைய அம்மா பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கலாம்' என்கிற அளவிற்கு ஷிவானிக்கும் ஒரு படி மேலே சென்று மக்கள் மனதில் இடம்பிடித்தார் அவருடைய அம்மா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss 4 Tamil Balaji Shivani Viral Insta Reels Video

Bigg Boss 4 Tamil Balaji Shivani Viral Insta Reels Video

Bigg Boss 4 Tamil Balaji Shivani Viral Insta Reels Video : ஓவியா-ஆரவ், யாஷிகா-மஹத், ஐஸ்வர்யா-ஷாரிக், லாஸ்லியா-கவின் வரிசையில் பிக் பாஸ் வீட்டின் சமீபத்திய டூயட் ஜோடி, ஷிவானி - பாலா. சர்ச்சைகளுக்குக் குறைவில்லாமல் நகரும் பிக் பாஸ் வீட்டில், பாலா-ஷிவானி டிராக் வேற லெவல். சாதாரணமாகப் பேசுவதையும், பழகுவதையும் பின்னணி பாடல் மூலம் மெருகேற்றி, ட்ரெயிலரில் எடிட்டர் அலப்பறை செய்த கதையெல்லாம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதா!

Advertisment
publive-image

அடடா! செம்ம ஜோடிப்பா! என்று இவர்களை ரசித்து சில்லறைகளைச் சிதறவிட்டவர்கள் ஏராளம். ஒருபுறம் சனம், ஆரி, அர்ச்சனா எனப் பலரோடும் வம்புகளை இழுத்து தினமும் புதுப்புது கன்டென்ட் கொடுத்துக்கொண்டிருந்த பாலாவிற்கு ஊட்டி விடுவது, உறங்க வைப்பது என சேவை செய்வதைத் தவிர வேறு வேலை இல்லாமல் இருந்தார் ஷிவானி. இதனால், பிக் பாஸில் என்ன ஷிவானி செய்கிறார்! முதலில் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று '4 மணி ஷிவானியை' கரித்துக்கொண்டே இருந்தனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

publive-image

இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டு நொந்து நூலாகிப் போன ஷிவானியின் தாய், 'ஃப்ரீஸ் டாஸ்கின்போது' பதம் பார்த்துவிட்டார். இதுவரை பார்த்திடாத கோவமான அம்மாவை பார்த்து ஷிவானிக்கு மட்டுமல்ல நமக்கே செம்ம ஷாக். 'ஷிவானிக்கு பதிலாக அவருடைய அம்மா பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கலாம்' என்கிற அளவிற்கு ஷிவானிக்கும் ஒரு படி மேலே சென்று மக்கள் மனதில் இடம்பிடித்தார் அவருடைய அம்மா. அந்த அளவிற்கு மிகவும் ஸ்ட்ரிக்ட் மம்மியாக காட்டப்பட்டார்.

publive-image

இதனைத் தொடர்ந்து, பாலாவிடமிருந்து விலகி, சில கஷ்டமான டாஸ்குகளில் நன்கு விளையாடி இறுதி வாரத்தில் 'சிங்கப்பேன்' என்ற நற்பெயரோடு வீட்டைவிட்டு வெளியேறினார் ஷிவானி. அதன்பிறகு, சில நிகழ்வுகளில் இருவரையும் ஒன்றாகக் காண முடிந்தது. இந்நிலையில் தற்போது ஷிவானி உடன் இணைந்து நடித்து, ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் வீடீயோவை வெளியிட்டு இருக்கிறார் பாலாஜி.

திருட திருடி படத்தில் கருணாஸ் மற்றும் தனுஷ் இடையே இருக்கும் நகைச்சுவையான உரையாடலின் ஒரு தொகுப்பை எடுத்து பாலா, ஷிவானி பேசி நடித்துள்ளனர். இது, பிக் பாஸ் வீட்டில் ஷிவானியின் அம்மா பாலாஜி உடன் சேராதே எனத் திட்டியதற்கு ஷிவானி மன்னிப்பு கேட்பது போன்று இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கமென்ட்டுகளால் பக்கத்தை நிரப்புகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Shivani Narayanan Balaji Murugadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment