புயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்?  

Bigg Boss 4 tamil நேற்று இரவு மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரையும் பத்திரமாகக் கொண்டு சேர்க்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

By: November 27, 2020, 10:10:07 AM

Bigg Boss 4 Tamil and Nivar : முன்பு எந்த சீஸன்களைப்போல் இல்லாமல், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 சுவாரசியம் குறைவாகவே இருந்தது. ஐம்பது நாள்களைக் கடந்தும், இன்னும் வீட்டிலிருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் ‘நிவர்’ புயல் காரணமாக் கடந்த மூன்று நாட்களாகச் சென்னையில் பெய்த தொடர் மழையால் பிக் பாஸ் வீடு பூட்டப்பட்டு, போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை நான்கு பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாலும், இரண்டு புதிய போட்டியாளர்களின் என்ட்ரி பிக் பாஸ் வீட்டை இன்னும் முழுமையானதாகவே காட்டுகிறது. 15 பேர் இருந்தாலும், இந்த சீசன் அவ்வளவு சுவாரஸ்யமானதாக இல்லை என்கிற புகார்கள் மக்களிடத்திலிருந்து வந்துகொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் போட்டியாளர்களின் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் தொடர் மழை காரணமாகப் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிவர் புயல் காரணமாகச் சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக, பூந்தமல்லி ஈ.வி.பி சிட்டியில் அமைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் மழை நீர் புகுந்துவிட்டது. மேலும், அதிகப்படியான மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏறித் திறக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டிற்கும் ஏரிக்கும் சில கிலோமீட்டர் தூரமே என்பதனால், பதற்றம் இன்னும் அதிகரித்தது. பிக் பாஸ் வீட்டின் கார்டன் பகுதி, நீச்சல் குளம் ஆகியவை மழை நீரால் சூழ்ந்து, இடுப்பளவு வரை தண்ணீர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், போட்டியாளர்கள் அனைவரும் பயத்தில் உறைந்திருக்கின்றனர் என்றும் உடனே தங்களை வீட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை போட்டியாளர்கள் அனைவரையும் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றி, பக்கத்தில் இருக்கும் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். வீட்டினுள் மழைநீர் வடிந்தபின் நேற்று இரவு மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரையும் பத்திரமாகக் கொண்டு சேர்க்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 4 tamil contestants evacuated from house due to nivar cyclone rainfall in chennai tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X