16 கோடிக்கும் மேல் வாக்குகள் பெற்று ‘கப்’ அடித்த ஆரி: பிக் பாஸ் ஃபைனல் ஹைலைட்ஸ்

Bigg Boss Finals Live ‘விக்ரம்’ திரைப்படத்திலிருந்து பேக்கிரவுண்ட் மியூசிக் ஒலிக்க, ஸ்மார்ட்டாக என்ட்ரி கொடுத்த கமல்.

Bigg Boss 4 Title Winner Aari Tamil Vijay Tv Journey of Aari
Bigg Boss 4 Title Winner Journey of Aari

Bigg Boss 4 Tamil Live Update : முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு பிரம்மாண்டமான மேடை, அனைத்து போட்டியாளர்களின் வரவு, அவர்களின் பிரத்தியேக அறிமுகம் என மிகவும் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது பிக் பாஸ் சீசன் 4-ன் இறுதி நாள். சாரி சாரி வெற்றியாளரை அறிவிக்கும் தினம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்திலிருந்து பேக்கிரவுண்ட் மியூசிக் ஒலிக்க, ஸ்மார்ட்டாக என்ட்ரி கொடுத்து, கோவிட் பணியாளர்களின் சேவையைப் பாராட்டியபடி இந்த சீசனை எப்படியோ நூறு நாள்களுக்கு  நகர்த்திச் சென்ற அனைவர்க்கும் நன்றி கூறியபடி ஆரம்பமானது இறுதி நாள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Live Blog

Bigg Boss 4 Tamil Live : பிக் பாஸ் சீசன் 4 செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


00:43 (IST)18 Jan 2021

16 கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று ‘கப்’ அடித்த ஆரி!

105 நாட்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, 16 கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார் ஆரி. இவருடைய வெற்றி பல வாரங்களுக்கு முன்பே முடிவானது. என்றாலும் பல தடைகளை தாண்டி இன்று அந்த பிக் பாஸ் கப்பை தன் வசமாக்கியுள்ளார் ஆரி. நிச்சயம் இந்த வெற்றி பலரின் கனவு என்றும் சொல்லலாம். பல சவால்களை தனி மனிதனாய் எதிர்கொண்டு வெற்றி பெட்ரா ஆரிக்கு வாழ்த்துகள்!

23:33 (IST)17 Jan 2021

அறிவுரையும் முரட்டுத்தனமும் இணைந்தத் தருணம்!

இறுதிக் கட்டத்தை நோக்கி நகரும் பிக் பாஸ் சீசன் 4, பல நினைவலைகளை சுமந்தபடி நகர்ந்துகொண்டிருக்கிறது. இறுதி சுற்றுக்கு முன்னேறிய ஐவரில் தற்போது இருதுருவங்களாக இருந்த ஆரி மற்றும் பாலா மட்டுமே எஞ்சியிருக்கின்றனர்.

23:02 (IST)17 Jan 2021

கனத்த மனதோடு மூன்றாவதாக வெளியேறிய ரியோ!

பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4- மூன்றாவதாக வெளியேற்றப்பட்டார் ரியோ. இந்த சீஸனின் நாகைச்சுவை நாயகனாக வலம்வந்தவர் இடங்களில் தனித்தன்மையை வெளிப்படுத்த தவறிவிட்டார் என்றே சொல்லலாம். வெற்றி வாகையை சின்ன நூலிழை கேப்பில் தவறவிட்டிருக்கிறார் ரியோ.

22:44 (IST)17 Jan 2021

புதிய கதர் பிராண்ட் அறிமுகம்

அரசியலுக்கு மட்டுமல்ல தன்னுடைய சொந்த புதிய ஃபேஷன் தொழிலுக்கான மார்க்கெட்டிங் மேடையாகவும் பயன்படுத்திக்கொண்டார் கமல். தன்னுடைய புதிய கதர் ஆடை பிராண்டான ‘கமல் ஹாசன் ஹவுஸ் ஆஃப் கதர்’ அறிமுகம் செய்து போட்டியாளர்கள் அனைவர்க்கும் பரிசளிக்கவும் செய்தார் கமல்.

22:40 (IST)17 Jan 2021

31 கோடி வாக்குகள்

இந்த சீசனில் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 290 கோடிக்கு மேல். அதிலும் இறுதி சுற்றுக்கு மட்டும் சேகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 31 கோடி 27 லட்சத்துக்கும் மேல் பதிவாகியுள்ளதாம்.

22:08 (IST)17 Jan 2021

கைவிரலில் மட்டுமே கறை இருக்கவேண்டும் – கமலின் சூடான ரீவைண்ட் குறும்படம்

முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனுக்கு பிரேத்தியேக குறும்படத்தை ஓட்டிக்காட்டினார் பிக் பாஸ். ஒருவேளை இதுதான் கமல் தொகுத்து வழங்கும் இறுதி பிக் பாஸ் சீசனாக இருக்குமோ!

20:58 (IST)17 Jan 2021

அதே புன்னகையோடு இரண்டாவதாக வெளியேறிய ரம்யா பாண்டியன்

சிங்கப் பெண்ணே என்று இறுதிக் கட்டத்தில் பல ரசிகர்களை சம்பாதித்த ரம்யா பாண்டியன் இரண்டாவதாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். முக்கியமாக அதே புன்னகையோடு!

20:35 (IST)17 Jan 2021

இன்ப அதிர்ச்சி கொடுத்த கவின்

இரண்டாவதாக வெளியேறப்போகும் போட்டியாளரை வீட்டைவிட்டு கூட்டிச் செல்வதற்காக கடந்த சீசன் வைரல் போட்டியாளர் கவின் அரங்கேறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

20:35 (IST)17 Jan 2021

ஜனங்களின் மனதில் சனம், ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிஷா – பிக் பாஸின் விருதுகள்

பியூட்டிஃபுள் சம்யுக்தா, ஜனங்களின் மனதில் சனம், ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிஷா, போல்ட் அண்ட் பியூட்டிஃபுள், லவ்வபில் ஆஜீத், ஃபியர்லெஸ் சுச்சி, டான்சிங் டால் ஷிவானி டியூட் வேல்முருகன் என ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் செல்ல பெயர் வைத்து கவுரவித்தார்.

20:02 (IST)17 Jan 2021

முதலாவதாக வெளியேற்றப்பட்ட சோம் சேகர்

டிக்கெட் டு ஃபினாலே வெற்றிபெற்ற சோம் சேகர், குறைந்த வாக்குகளை பெற்று முதலாவதாக பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

19:49 (IST)17 Jan 2021

ஏமாற்றி விளையாடிய முகேன்

யார் வெளியேறுவார்கள் என்கிற பதற்றத்தில் இருப்பவர்களை மேலும் பரப்பரப்பைக் கிளப்பி ஃபைனலிஸ்ட்களை ஒரு வழி செய்துவிட்டார் முகேன். ரியோ, ரம்யா, ஆரி என வரிசையாக யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பில் இறுதியாக சோம் வெளியேற்றப்பட்டார்.

19:30 (IST)17 Jan 2021

ட்விஸ்ட் கொடுத்த கமல்

தான் வெற்றிபெற்ற கப்போடு உள்ளே சென்ற முகேன், குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளரை வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்கிற ட்விஸ்ட்டோடும் உள்ளேச் சென்றுள்ளார்.

19:21 (IST)17 Jan 2021

கப்போடு என்ட்ரியான முகென்

‘கப் அடிக்கனும்’ என்று இந்த சீசன் போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அந்த கப்பை தன் வசமாக்கிய கடந்த சீசன் போட்டியாளரான முகேன் மேடையில் தோன்றி அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

19:21 (IST)17 Jan 2021

கப்போடு என்ட்ரியான முகென்

‘கப் அடிக்கனும்’ என்று இந்த சீசன் போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அந்த கப்பை தன் வசமாக்கிய கடந்த சீசன் போட்டியாளரான முகேன் மேடையில் தோன்றி அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

19:04 (IST)17 Jan 2021

நீ சோகமா இருந்தா பார்க்கமுடில பாலா

தன் சகோதரனின் என்ட்ரியை தொடர்ந்து மிகவும் குழப்பமாகவும் ஆக்ரோஷமாகவும் மாறிய பாலாஜியை கண்டு, ‘நீ சோகமா இருந்தா பார்க்க முடில’ என எமோஷனலாக பகிர்ந்துகொண்டார் பாலாஜியின் சகோதரர்.

19:01 (IST)17 Jan 2021

உங்கள் காதல் மீண்டும் என்னை வியக்கச் செய்கிறது – கமல்

ரியோவின் வாடிய முகத்தைக் கண்ட அவருடைய மனைவி சுருதி, சிரிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டதை பார்த்த கமல் ‘மீண்டும் மீண்டும் என்னை வியக்க வைக்கிறீர்கள்’ என்று கூறி பூரித்தார் கமல்.

18:59 (IST)17 Jan 2021

ரியோவிற்கு ‘காம்பஸ்’ பரிசளித்த கமல்

வீட்டைவிட்டு வெளியே வந்ததும் முதலில் காட்டிற்குச் செல்வேன் என்று சொன்ன ரியோவிற்கு திசை காட்டும் காம்பஸ் கொடுத்து மகிழ்வித்தார் கமல்.

Bigg Boss 4 Finals Live Updates : பிக் பாஸ் சீசன் 4-ன் இறுதி நாள். சாரி சாரி வெற்றியாளரை அறிவிக்கும் தினம்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil live kamal hassan aari balaji ramya rio som

Next Story
ஆரி வெற்றிபெறவில்லை என்றால் பிக் பாஸ் இனி இல்லை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Aari Bala Rio Ramya Som Finals
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com