பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. முதல்நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இமான் அண்ணாச்சி, ராஜூ ஜெயமோகன், விஜே பிரியங்கா வருண் உள்ளிட்ட சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் முதஸ் டாஸ்க் கடந்து வந்த பாதை எபிசோடில், போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களையும், வாழ்க்கையைப் பாதையையும் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த டாஸ்க்கில், நேற்று பேசிய மாடல் அழகின் ஸ்ருதியின் கதை, பலரின் மனதையும தொட்டுவிட்டது. அவருக்கு பல தரப்பிலும் ஆதரவு அளிக்க சமூக வலைத்தளங்களில் படை கிளம்பிவிட்டது.
அப்படி என்ன சொன்னாங்க?
எங்க அப்பாவுக்கு, என் அம்மா இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வச்சாங்க. அப்பாவுடைய முதல் மனைவி இறந்ததால், சொந்தத்திலே திருமணம் செய்யனுமுனு சொல்லி கல்யாணம் செஞ்சு வச்சாங்க்.
அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் ஒரே வயசு
என் அப்பாவுக்கும் என் அம்மாவோட அப்பாவுக்கும் ஒரே வயசு தான். நான் எங்க அம்மா வயித்துல உருவான போது, எனக்கு ஏற்கனவே வாரிசு இருக்கிறது, உனக்கு வேண்டுமானால் இந்த குழந்தையை பெத்துக்க என என் அப்பா சொல்லிருக்காரு. அவரை பொறுத்தவரை நான் வேண்டாதவள், Unwanted Child தான் என ஸ்ருதி அழுதபடியே சொல்ல ஆரம்பித்தது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் பலரின் இதயங்களையும் நிச்சயம் நொறுக்கியிருக்கும்.
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான எந்தவொரு பந்தமும் இருந்ததே கிடையாது. அப்பா என்னைத் தொட்டுக் கூட பேசியது இல்லை. நான் அவரை அப்பான்னே கூப்பிட்டது இல்லை. மற்ற தோழிகள் அவர்கள் அப்பாவுடன் அன்போடு இருப்பதைப் பார்த்துப் பல முறை அழுது இருக்கிறேன்.
அப்பா இறந்தது ஹேப்பியா இருந்தது
எனக்கு 11 வயசு இருந்தபோது, ஸ்கூல் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும், எல்லாரும் சோகமா இருந்தாங்க. அப்பா இறந்துட்டாங்கன்னு சொன்னதும் ரொம்ப சந்தோசப்பட்டேன். இனிமே என்னை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது என நினைத்தேன். அது சரியா தவறா என கூட தெரியாது. ஆனா, அப்போதைக்கு என் மனநிலை அப்படித்தான் இருந்தது. அப்பா இறந்து காரியம் நடந்த அந்த 16 நாளும் சந்தோஷமாகத் தான் இருந்தேன்
அம்மாவைக் கல்யாணம் பண்ணும் போதே அப்பாவுக்கு 50 வயசு ஆயிடுச்சு. அப்பா போன பிறகு வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லை. அம்மா டெய்லரிங்கல சம்பாதிக்கிற காசுல தான் 10 ரூபாய்க்கு ரவா வாங்கி உப்மா செய்து சாப்பிடும் நிலைமை தான் இருந்துச்சு.
ஹைட்டால் உயர்ந்தேன்
அப்புறம் அம்மாவுக்கும் ஒரு சின்ன விபத்து நடந்துச்சு, அதோ எங்க வாழ்க்கை முடிஞ்சுனு நினைத்தோம். எப்படியோ, என்னோட ஹைட்டாலா, ஸ்போர்ட்ஸ் மூலம் புது லைப் கிடைச்சு. பிடெக்ல ப்ர்ஸ்ட் கிளேஸ்ல பாஸ் ஆனேன். 6 கம்பெனியில வேலை வாய்ப்பு கிடைத்தது. நானே ஒண்ண சூஸ் பண்ணேன் இப்போ இங்க வந்து நிற்கிறேன் என தனது பயணத்தை முடிவின்றி சொல்லி கொண்டிருந்தார் சுருதி. என்னாலும், கடந்து வந்த பாதையில் பலரின் மனதை ஸ்ருதியின் கதை நிச்சயம் புரட்டி போட்டிருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.