/tamil-ie/media/media_files/uploads/2021/09/Kam.jpg)
Bigg Boss 5 Grand Launch Date and Timing Tamil News Vijay Tv
Bigg Boss 5 Grand Launch Date and Timing Tamil News Vijay Tv : எப்போதுதான் அடுத்த சீசன் பிக் பாஸ் தொடங்கும் என்கிற டிஸ்கஷனிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது விஜய் டிவி. ஆம், கொரோனா பரவல் காரணமாகத் தாமதமாகிக்கொண்டே போன பிக் பாஸ் சீசன் 5 எப்போது, எந்த நேரத்தில் தொடங்கவுள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
பிக் பாஸ் என்றாலே விவாதங்கள்தான். போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் இது பொருந்தும். அந்த வரிசையில், சீசன் 5 எப்போது தொடங்கும், இம்முறை யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்கிற விவாதங்கள் சூடுபிடிக்க, ஜி தமிழ் தொடலைக்காட்சி சர்வைவர் எனும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒத்த ஷோவை அறிமுகம் செய்தனர். என்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறையவில்லை. இந்நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 5-ன் பிரம்மாண்ட துவக்க நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என விஜய் டிவி உறுதி செய்திருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Bigg.png)
இதனால், பொது மக்கள் தங்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். சென்ற வருடம் போல இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்துப் போட்டியாளர்களையும் ஹோட்டலில் தனிமைப்படுத்தியுள்ளனர். கூடுதலாக இம்முறை அவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்கிற விதிமுறையையும் சேர்த்திருக்கின்றனர்.
பிங்க் வண்ணத்தில் அசத்தலான லோகோ ஏற்கெனவே வெளிவந்த நிலையில், இம்முறை பிரம்மாண்ட வீடு எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், யாரெல்லாம் இந்த போட்டியில் கலந்துகொண்டால் சுவாரசியமாக இருக்கும் என்றும் யாரெல்லாம் நிச்சயம் செல்கிறார்கள் என்கிற தகவல்களையும் அரசல் புரசலாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த வரிசையில், விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, ஷகிலா மகள் மிலா உள்ளிட்ட பலரின் பெயர்கள் தற்போது உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.