பிக் பாஸ் சீசன் 5-ல் ஜி.பி முத்து… இது நிஜமா?

vijay tv’s bigg boss 5 gp muthu viral photo Tamil News:டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, பிக் பாஸ் வீட்டின் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

bigg boss 5 news in tamil: tiktok fame gp muthu hints at participation in bb5

GP muthu Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 5-க்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது போட்டியாளராக யாரெல்லாம் இடம் பிடிக்க உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர்கள் தான் போட்டியாளராக களமிறங்க போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் ஒன்றும் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. இதற்கு, பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்களில் பலர் தாங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளா போவதில்லை என்று விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

இந்த உத்தேச பட்டியலில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவின் பெயர் இடம்பிடித்திருந்த நிலையில், அவர் ஏற்கனவே சில திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார் என்றும், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டின் முன்பு நின்று எடுத்த ஒரு புகைப்படம் தற்போது இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சில நெட்டிசன்கள் ‘செத்தப்பயலே நாரப்பயலே’ என்ற பேமஸ் வசனத்துடன் டிக்டாக் ஜிபி முத்து களமிறங்கினால் சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்றுள்ளனர். மற்றும் சிலரோ, ‘உள்ளே மட்டும் போய்டாதீங்க’ என கிண்டலாக கூறி வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 news in tamil tiktok fame gp muthu hints at participation in bb5

Next Story
சீரியலில் எதிரி… நிஜத்தில் ஃப்ரண்ட்ஸ்: மாடர்ன் ராதிகாவுடன் கொஞ்சும் எழில்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com