/tamil-ie/media/media_files/uploads/2022/01/aari-bigg-boss-tamil-4-1200.jpg)
Bigg Boss 5 Tamil Aari Controversy Tweet Tami News
Bigg Boss 5 Tamil Aari Controversy Tweet Tami News : பரபரப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. என்னதான் டிஆர்பியில் டாப் இடத்தைப் பிடித்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை சுற்றியுள்ள சர்ச்சைகளுக்குக் குறைவே இல்லை. அந்த வரிசையில், ஐந்தாம் சீஸனின் இறுதி நாளான இன்றும் பிக் பாஸ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஐந்தாம் சீசனின் இறுதி நாள் இன்று மாலை டிவியில் டெலிகாஸ்ட் ஆகவிருக்கும் நிலையில், மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த கடந்த சீஸனின் வெற்றியாளர் ஆரி இந்த நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என்பதுதான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக். ஆம், ஐந்து சீசன்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும், ஆரிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை. சென்ற சீசனில் வெற்றிபெற்ற ஆரி, இம்முறை வெற்றியாளரை கௌரவப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்னை யாரும் அழைக்கவில்லை என்று ஆரி ட்வீட் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்ற சீசன்களில் வெற்றிபெற்ற ஆரவ், ரித்விக்கா, முகேன் ராவ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அந்தந்த சீசன் போட்டியாளர்களை வாழ்த்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். அந்த வரிசையில் இம்முறை ஆரி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரி வராமல் போனது அனைவர்க்கும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
I know you guys were looking forward for me in the trophy hand over segment in this bb5 finale even I was excited to meet you guys and kamal sir again but unfortunately I wasn't invited for the show. @ikamalhaasan@vijaytelevision
— Aari Arujunan (@Aariarujunan) January 15, 2022
இதையடுத்து தனது ரசிகர்கள் டிவியை பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று எண்ணிய ஆரி, ”பிக் பாஸ் சீசன் 5 ஃபனல்ஸூக்கு நான் வரவில்லை. வருத்தம் வேண்டாம். நானும் ஆவலுடன் போட்டியாளர்களையும், உங்களையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இம்முறை பிக் பாஸ் குழுவிலிருந்து எனக்கு அழைப்பு விடுக்கவில்லை” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார் ஆரி. இதனால் ஆரியின் ரசிகர்கள் விஜய் டிவி பிக் பாஸ் குழு மீது கோபத்தில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.