/tamil-ie/media/media_files/uploads/2021/12/Pavb2up.jpg)
Bigg Boss 5 Tamil Amir kissed Pavani controversy scene Tamil News
Bigg Boss 5 Tamil Amir kissed Pavani controversy scene Tamil News : பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் 75 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. இதன் இறுதிக் கட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த சீசனின் இரண்டாவது வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அமீர், பாவனியுடன் நெருங்கிப் பழகி வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது தற்போது எல்லை மீறிப்போவதுதான் சமீபத்திய சர்ச்சைகளுக்கான காரணம்.
சமீபத்திய எபிசோடில், அமீர் பாவனியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, எந்த விதமான உறவிலும் தனக்கு விருப்பமில்லை என்று பாவனி தெளிவுபடுத்தினார் மற்றும் அவரை சகோதரர் என்றும் அழைத்தார். அவரை தம்பி என்று அழைத்தாலும், அமீரின் செயல்களைப் பார்த்துச் சிரித்து மகிழ்வதை நாம் முந்தைய எபிசோடுகளில் பார்த்திருப்போம்.
நேற்று இரவு ஒளிபரப்பப்பட்டு எபிசோடில் ஒரு பகுதியாக, ஏதோ ரகசியம் சொல்வதுபோன்று பக்கத்தில் சென்று அமீர் பாவனியை முத்தமிட்டார். அமீரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் பரபரப்பான சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது அமீரின் எதிர்பாராத செயலாக இருந்தது. இவ்வளவு நாள் அமீர் மீதான நற்பெயர் இதன்மூலம் வீழ்ந்தது.
ஏற்கெனவே, அபினய் உடனான எபிசோட் தனக்கு ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தியிருக்குமா என்று கவலைப்பட்டார் பாவனி. இதனால், அமீர் பாவனியின் மன அழுத்தத்தை குறைக்க விரும்பினார். இதற்காக அமீர் பாவனியை முத்தமிட்டார். ஒரு ரகசியம் சொல்ல பாவனியை அழைத்ததை நம்பி அமீர் ஏதோ சொல்லப் போகிறார் என்று நம்பி பாவனி அமர்ந்திருந்தார். ஆனால், அருகில் வந்ததும் அவர் காதுகளுக்கு அருகில் சென்று முத்தம் கொடுத்தார் அமீர்.
உடனடியாக, பாவனி அமீர் செய்ததைக் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால், பாவனி கோபப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் செய்தது தனக்குப் பிடிக்கவில்லை என்று பாவனி குறிப்பிட்டுள்ளார். அமீர் பாவனியை முத்தமிடும் காட்சிகள் நேற்றிரவு முதல் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. மேலும், பார்வையாளர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளும் பற்றிக்கொண்டன. முத்தமிடுவதற்கு முன்பு பாவனியிடம் சம்மதம் கேட்காததால் அமீரின் செயல் தவறு என்று பார்வையாளர்களில் பெரும்பாலோர் கருத்து தெரிவிக்கையில், அவர் எல்லை மீறிச் சென்றுள்ளார் என்று மற்றொரு பிரிவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாவனி அமீரை நிறுத்தி அவர்களின் உறவுகளுக்கான எல்லைகளைக் காட்டியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
#Amir enna ithu ellam, But #Pavni itself not saying anything.
— Netfreak💻 (@Netfreak555) December 18, 2021
Adei #VijayTelevision u will show the scene which need to be edited out, but will edit out important scene need for the episode 🤦🏻♂️#BiggBossTamil5#BBTamilSeason5pic.twitter.com/2spTM1SMR4
இரவு நேரத்தில் மற்ற போட்டியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த முத்தச் சம்பவம் நடந்ததால் மற்றவர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமீரின் இந்த செயல் குறித்து உங்கள் பார்வை என்ன?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.