ரூ.12 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்!
Bigg Boss 5 Tamil Ciby left the house with 12 lakhs Tamil news இன்று காலை வெளிவந்த புரொமோவில் அமீர் ரூ. 11 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டது.
Bigg Boss 5 Tamil Ciby left the house with 12 lakhs Tamil news
Bigg Boss 5 Tamil Ciby left the house with 12 lakhs Tamil news : நூறாவது நாள் நெருங்க நெருங்க, விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருக்கிறது தமிழின் ஐந்தாம் சீசன் பிக் பாஸ். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை தொடர்ந்து இந்த வாரம், குறிப்பிட்ட தொகையை வைத்து, அதனை எடுத்துக்கொண்டு யார் வீட்டைவிட்டு வெளியேறப்போகிறார் என்பதுதான். அந்த நபர் யார் என்கிற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.
Advertisment
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, இன்னும் சில தினங்களில் முடியப் போகிறது. பிரியங்கா, தாமரை, பாவனி, ராஜு, சிபி, அமீர், நிரூப் என இப்போது வரை வீட்டில் 7 பேர் உள்ளனர். இவர்களில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அமீர் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட, மற்ற போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி அரங்கேறியுள்ளது.
இந்த வாரம் இருவர் வெளியாகவிருக்கும் நிலையில், 3 லட்ச ரூபாயை வீட்டிற்குள் கொண்டு வந்தார் சரத்குமார். விருப்பப்பட்டவர்கள், இந்த தொகையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறலாம். மேலும், இந்த தொகை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துச் சென்றார் சரத்குமார்.
இந்த தொகையை எடுத்துக்கொண்டு யார் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்போடு, எவ்வளவு தொகையை எடுத்துக்கொண்டு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாக இருந்தது. அந்த வரிசையில் இன்று காலை வெளிவந்த புரொமோவில் அமீர் ரூ. 11 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டது.
ஆனால், தான் பிராங்க் செய்ததாக மூன்றாவது ப்ரோமோவில் அமீர் தெரிவித்திருப்பார். உண்மையில் வீட்டைவிட்டு வெளியேறியது சிபிதான் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அவர் ரூ. 12 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்திலிருந்து மிகவும் நேர்மையாக விளையாடிய சிபி, வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil