scorecardresearch

Bigg Boss Tamil 5: ஜாக்குலின், சுனிதா, பவானி ரெட்டி… ரொம்ப கவனமாக போட்டியாளர்களை தேர்வு செய்யும் விஜய் டிவி!

Bigg Boss 5 Tamil Confirmed Contestants Tamil News அவருடைய யூடியூப் காணொளிகளும் ஹிட். இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது பலரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Bigg Boss 5 Tamil Confirmed Contestants Tamil News
Bigg Boss 5 Tamil Confirmed Contestants Tamil News

Bigg Boss 5 Tamil Confirmed Contestants Tamil News : தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, அக்டோபர் 3-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. வழக்கம்போல கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 16 போட்டியாளர்களைக் களமிறக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது சேனல். எப்போதுமே டிஆர்பியில் போட்டியின்றி டாப் இடத்தைப் பிடிக்கும் இந்த ரியாலிட்டி ஷோ, இம்முறை சர்வைவர், ஐபிஎல், மாஸ்டர் செஃப் உள்ளிட்ட ஏராளமான போட்டி நிகழ்ச்சிகளோடு போட்டியிட உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இம்முறை யாரெல்லாம் போட்டியாளர்கள் என்கிற விவாதங்களும் மறுபக்கம் அனல் பறக்க நடந்துகொண்டுதான் இருக்கிறது. இம்முறை போட்டிப் போடும் நிகழ்ச்சிகளும் அதிகம் என்பதால், போட்டியாளர்களை அதிக கவனத்துடன் தேர்வு செய்திருக்கிறது விஜய் டிவி. ஆம், தற்போது வரை 20 போட்டியாளர்களின் பெயர்கள் உள்ளதாம். அதிலிருந்து 16 இறுதி போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது அதன் தேர்வு குழு. அதில் உறுதி செய்யப்பட்ட 8 பேர் இவர்கள்தான்.

ஜாக்குலின்

நிகழ்ச்சி தொகுப்பாளினி, சின்னதிரையில் மட்டுமல்ல வெள்ளித்திரை நடிகை எனப் பன்முக திறமை வாய்ந்தவர் ஜாக்குலின். லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இணைந்தார். இவருடைய நகைச்சுவை கலந்த சொதப்பும் ஆங்கரிங்கிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். பிறகு, ‘தேன்மொழி பி.ஏ’ தொடர் மூலம் எல்லோர் மனத்திலும் நடிகையாக நீங்கா இடம் பிடித்தவர், இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தடம் பதிக்கவுள்ளார்.

சுனிதா

வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுனிதாவின் நடனத்திற்கு அவர் பேசும் கொஞ்சும் தமிழுக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் ஏராளம். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் ஆரம்பமான இவருடைய திரைப்பயணம், குக் வித் கோமாளி வரை நீண்டது. தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதில் ஏராளமான நகைச்சுவை கன்டென்ட்டுகளை கொடுத்து வருகிறார். ஏடாகூடமாக கார் ஓட்டி விபத்தில் சிக்கிக்கொண்டு விமர்சனத்திற்குள் உண்டான சுனிதா, மொழி தெரியாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ!

பாவனி ரெட்டி

தெலுங்கு சீரியல் உலகிலிருந்து இருந்து தமிழ் உலகிற்கு வந்தவர் பாவனி. சன் டிவி இவரை அறிமுகப்படுத்தினால், ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்கள்தான் இவரை அடுத்தாக கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. கடந்த சில தினங்களாக, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். அதேதான்! நம்ம 4 மணி ஷிவானி போல!

பிரியங்கா

விஜய் டிவி தொகுப்பாளினி என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் பிரியங்கா. அவருடைய அழகான சிரிப்பிற்கு அவ்வளவு ரசிகர்கள். வடிவேல் பாணியில் தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டு, நிகழ்ச்சியை நகைச்சுவை உணர்வோடு கொண்டுபோகும் திறமை வாய்ந்தவர் பிரியங்கா. அவருடைய யூடியூப் காணொளிகளும் ஹிட். இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது பலரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சூசன்

இவரை சூசன் என்பதைவிட ‘மைனா’ சூசன் என்றால்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து, பலரின் கோபத்துக்கு ஆளான இவர், சமீப காலங்களில் இந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்கிறார் சூசன்.

சந்தோஷ் பிரதாப்

பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சந்தோஷுக்கு புகழ் சேர்த்தது. இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க காத்துக்கொண்டிருக்கிறார்.

மாடல் கோபிநாத்

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடல்களுக்கு அதிக பங்கு உண்டு. அந்த வரிசையில் இம்முறை மிஸ்டர் இந்தியா வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபிநாத் பங்கேற்கிறார். 2017 முதல் மாடலிங்கில் இருக்கும் இவர் அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். கடந்த சீசன் பாலாஜி போல வலிமையான போட்டியாளராக இருப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மாடல் பிரதாயினி சர்வா

ஆண் மாடலுக்கு அடுத்து பெண் மாடலும் இருக்கணுமே. அந்த வரிசையில் கடந்த சீஸனின் சம்யுக்தாவின் தோழி பிரதாயினி சர்வா இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளார். இவர் ஏற்கெனவே, ‘போதை ஏறி புத்தி மாறி’ என்கிற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil confirmed contestants tamil news

Best of Express